Showing posts with label Naufal MQ. Show all posts
Showing posts with label Naufal MQ. Show all posts

Thursday, March 5, 2015

வணக்கம்,

இம்மாத போட்டித் தலைப்பு: Negative Space

எல்லா படங்களிலும் வெற்றிடங்கள் அல்லது தேவையில்லாத இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. சில நேரங்களில் இந்த வெற்றிடங்கள் ஒரு படம் தரும் உணர்வையே மாற்றி அமைத்துவிடும். ஒரு தேவையை உருவாக்கிவிடும்.

அச்சுத் தொழிலில் படங்களின் ஓரத்தில் எழுத்துக்களை சேர்ப்பதற்கும் இந்த வகையில் கட்டம் கட்டுவதை (கம்போஸ்  செய்வதை) கடைப்பிடிக்கிறார்கள்.

நீங்கள் எடுக்கும் படம் Minimalism ஆக கூட இருக்கலாம்.

அதாவது நீங்கள் செய்ய வேண்டியது... கருப்பொருளைச் சுற்றியிருக்கும், கவனத்தைக் கலைக்காத வெற்றிடத்தை சரியான வகையில் பயன்படுத்தி “ஆஹா!” சொல்ல வைக்க வேண்டும்

உங்களுக்கு எளிதாக புரிந்துகொள்வதற்கேற்ப கீழேயுள்ள படங்களுடன் அதற்கான காரணங்களும் செர்க்கப்படுள்ளன. மேலும் படங்களுக்கு இங்கே பாருங்க.

1) இந்தப் படத்தில் இருக்கும் வெற்றிடம், இந்தப் படகு செல்லும் திசையில் என்ன இருக்கிறது, மேலும் கடலின் பிரமாண்டத்தையும் நமக்கு உணர்த்துகிறது:

#Naufal MQ


2) இந்தப் படம் மினிமலிசத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு. பிள்ளையாரின் சிலையைச் சுற்றியிருக்கும் வெற்றிடம் ஒரு அமைதியை நமக்கு கடத்துகிறது:

#Ramalakshmi

3) இந்தப் படத்தில் சப்ஜெக்ட் மேலே மூலையில் ஓரங்கட்டப்பட்டு அலைகளுக்கு இடம் ஒதுக்கி கப்பல் கரை தட்டியிருப்பதை காட்டுகிறது:

#Naufal MQ


4) இந்தப் படங்களில் சப்ஜெக்டின்  மேற்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் இடம் ஒதுக்கப்பட்டு சப்ஜெடின் மீது நமது கவனத்தை அழகாக ஈர்க்கிறது:

#Ramalakshmi

#


5) இதில் ஒதுக்கப்பட்டுள்ள வெற்றிடம் மனிதன் இயற்கையின் பிரமாண்டத்தின் முன் சிறிய புள்ளிதான் என்பதை காட்டுவதாக உள்ளது:

#Naufal MQ

#

6) ரெட் சிக்னல் தான் இதில் சப்ஜெக்ட். பாதசாரிகள் கடந்து போகும் இடத்தை இதில் நெகடிவ் ஸ்பேசாக காட்டப்பட்டுள்ளது:

#Naufal MQ


நெகடிவ் ஸ்பேஸ்னா என்னன்னு இப்போ ஓரளவுக்கு புரிந்திருக்கும். மேலும் படங்களுக்கு இணையத்தில் தேடுங்க. கலக்கலான படங்களை எடுத்து போட்டிக்கு அனுப்புங்க. வாழ்த்துகள்!

போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 20 மார்ச் 2015
***

இதுவரை போட்டிக்கு வந்திருக்கும் படங்களைக் காண இங்கே செல்லலாம்:
https://picasaweb.google.com/111715139948564514448/201503#

Wednesday, December 16, 2009

HighKey படங்கள், நல்ல பிரகாசமான வெளிச்சத்துடன், குறைந்த contrast ல், மகிழ்ச்சியான முகப்பாவங்களுடன் ( பற்பசை விளம்பர சிரிப்போடு), பொதுவாக கருப்பு வெள்ளையில் எடுக்கப்படும் படங்கள். உதாரணதிற்கு இந்தப் படம் ( உபயம் விக்கிபீடியா ). இந்த மாதிரி படங்களை கிம்பில் செய்வது பற்றி இங்கே. அனைவரும் பிரியா மணி அக்காவுக்கு வணக்கம் சொல்லுங்கள். அவிங்க தான் இன்றைக்கு நமக்கு மாடல். ப்டத்தை கிம்பில் திறந்து கருப்பு வெள்ளைக்கு மாற்றிக் கொள்ளுங்கள். ( நினைவிருக்கட்டும், high key கலரிலும் செய்யலாம். ) எளிதான கருப்பு வெள்ளைக்கு மாற்றும் முறை. colors -> desaturate .. Luminosity... இந்த கருப்பு வெள்ளை லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள். புதிய லேயரின் mode => Addition என்று மாற்றிக் கொள்ளுங்கள். படம் பிரகாசமாய் ஆகி இருக்கும் .படம் பிடித்து இருந்தால், இதோடு கூட முடித்துக் கொள்ளலாம். வலது எலிக்குட்டியை கிளிக்கி Add Layer Mask தெரிவு செய்யுங்கள். Greyscale copy of the layer... படம் அழகாய் மெருகேறி இருக்கும். படம் பிடித்து இருந்தால் இந்த இடத்தோடும் நிறுத்திக் கொள்ளலாம். அடுத்த பகுதி, படத்தின் ஓரங்களை இன்னும் வெள்ளைக்கு மாற்றுவது. ( வினியட் பற்றி இங்கு ஏறகனவே பார்த்து இருக்கிறோம். இது அதேபோலத்தான். அங்கே கருப்புக்கு பதில் இங்கே வெள்ளை. ) ஒரு புதிய transparent லேயரை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு மெல்லிய , சிறிய opacity ( 10-20 % ) வெள்ளை நிற பிரஷ் கொண்டு ஒரங்களில் வெள்ளை அடிக்க ஆரம்பியுங்கள். மற்ற இரண்டு லேயரகளையும் எடுத்து விட்டு , நான் இப்படி சுண்ணாம்பு அடித்து இருக்கிறேன் என்று கீழே காண்பித்து இருக்கிறேன்.. அவ்வளவுதான் வேலை. கலரும் கருப்பு வெள்ளை படமும் அருகருகே. இன்னும் ஒரு உதாரணம்.இந்த முறை ரோஜா. (செல்வமணி ரோஜா இல்லீங்க. நிஜ ரோஜாத்தான். )
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff