Tuesday, July 31, 2007


வலையுலக நண்பர்களே... நீங்கள் ஆவலுடன்எதிர்பார்த்து வந்த "தமிழில் புகைப்படக்கலை" நடத்தும் "இந்த மாதப் புகைப்படம்" போட்டி இன்றே ஆரம்பிக்கிறது. (நான் நாளை வெளியூர் செல்ல இருப்பதால் போட்டி அறிவிப்பை இன்றே வெளியிடுகிறேன்). மன்னிக்கவும்!

போட்டித்தலைப்பு: போர்ட்ராய்ட் (மனிதர்களை அழகாக எடுத்தல்)
படைப்புகள் அனுப்ப கடைசி தேதி: ஆகஸ்டு 10
முடிவு அறிவிக்கப்படும் தேதி: ஆகஸ்ட் 14
நடுவர்கள்: எழுத்தாளர் பாமரன் & ஓசை செல்லா
ஒருங்கிணைப்பாளர்கள்: CVR and SURVEYSAN
பரிசளிப்பவர்: சிந்தாநதி

விதிமுறைகள்: ஒருவர் இரண்டு படங்கள் மட்டுமே அனுப்பலாம். தங்கள் வலைப்பூவில் புகைப்படங்களை போட்டு இங்கு சுட்டியை மட்டும் பின்னூட்டமாக இடவேன்டும். இந்த வலைப்பூ ஆசிரியர் குழுவும் (நடுவரான செல்லா தவிர்த்து) பங்கு கொள்ளலாம்! போட்டாசாப் போன்ற மென்பொருள்களை மிதமாக உபயோகிக்கலாம்! அனைவரும் பங்கு பெற வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஓசை செல்லா

= = = = = = = = =
தற்போதைய நிலவரம்

1.வசந்தன்

2.அமிழ்து

3.ஜி.ஆர்.பிரகாஷ்

4.சகாதேவன்

5.பவன்

6.ஆதி

7.அருள்குமார்

8.a.யாத்திரீகன்
8.b.யாத்திரீகன்

9.a.நாதன் (2 ஆம் பரிசு!)
9.a.நாதன

10.வி. ஜெ. சந்திரன்

11.a.லக்ஷ்மணராஜா
11.b.லக்ஷ்மணராஜா

12.பாரதிய நவீன இளவரசன்

13.a.தீபா
13.b.தீபா

14.சூரியாள்

15.ஜெஸிலா

16.வெயிலான்

17.சத்தியா
(முதல் பரிசு!)

18.சென்

19.அல்வாசிடி விஜய்
(சிறப்புப் ப(ட்)டம்)

20.சிறில் அலெக்ஸ்

21.கைப்புள்ள

22.ரவியா

23.பிருந்தன்

24.ஒப்பாரி
(3ஆம் பரிசு!)

25.ஆத்மன்

26.நிலா

27.காட்டாறு

28.விஜய்

29.முத்துலெட்சுமி

30.ஆதிபகவன்

31.சுல்தான்

32.சுரேஷ்

33.ஜெயகாந்தன்

34.விக்னேஷ்வரன் அடைக்கலம்

35.சதங்கா

36.லொடுக்கு

37.யோகன் பாரிஸ்

38.மோகன் தாஸ்

39.கோபாலன் ராமசுப்பு

40.கடலோடி பரணி

41.சுகந்தி

42.ஹரன்

43.அபி அப்பா

44.நானானி

45.ஜாலி ஜம்பர்

46.வற்றாயிருப்பு சுந்தர் (சிறப்புப் ப(ட்)டம்)

47.இம்சை
48.தருமி

போட்டிக்கான முடிவு தேதி ஆக்ஸ்ட் 10. போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் படங்களை அவர்களுடைய பதிவிலேயே இட்டு, சுட்டியை மட்டும் பின்னூட்டமாக இப்பதிவில் இடவேண்டும். போட்டியில் கலந்து சிறப்பிக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்...
CVR & SURVEYSAN
போட்டி ஒருங்கிணைப்பாளர்கள்

பின்குறிப்பு
சுட்டிகளில் தவறு இருந்தாலோ ,மற்றும் யார் பெயரேனும் விடு பட்டிருந்தாலும் தயவு செய்து பின்னூட்டத்தில் அறிவிக்கவும்!! :-)

Monday, July 30, 2007

நம்மில் பலரும் தற்பொழுது ZOOM LENS உள்ள டிஜிட்டல் காமிராவையே உபயோகிக்கிறோம். ஆனால் அதுஎதோ படத்த மட்டும் பக்கத்தில் கொண்டுவருகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது ஒரு வித அழகூட்டும் விசயமாக.. அதாவது Perspective கொடுக்கவும் உபயோகிக்க முடியும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

அருகிலுள்ள இரு பைக்குகளையும் பாருங்கள். நேற்று கிட்டத்தட்டே ஒரே ஆங்கிளில் க்ளிக்கியது தான். அதே பைக்தான். ஆனால் வெவ்வேறு zoom power ல் எடுத்தது. மேலே உள்ள படம் டெலி மோடிலும் கீழே உள்ளது வைட் மோடிலும் எடுத்தது. ஆனால் கீழே உள்ள படத்தில் வண்டியின் நீளம் அதிகமாக இருப்பது போல் தெரிகிறதா? உங்கள் டூ வீலரையும் இந்த மாதிரிஎடுக்கலாமே! ( க்ளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்)

பிகு: இதனால் தான் போர்ட்ராய்ட் படங்கள் எடுக்க வைட் ஆங்கிள் உபயோகப்படுத்தமாட்டார்கள். காரணம் முக அமைப்பு மாறிவிடும்!

Recent Posts











Sunday, July 29, 2007



நான் எப்பொழுதும் ஏதாவது ஒரு காமிராவை தயார் நிலையில் என்னுடன் வைத்திருப்பேன். என்னைச் சுற்றீ நடக்கும் ஒரு விசயத்தை நான் மற்றவ்ர்களுடன் பகிர்ந்துகொள்ள இது அவசியம் என்று நான் கருதுகிறேன். ஒரு நண்பரின் அழைப்பிற்கிணங்க ஓரிடத்துக்குச் சென்றேன். கண்ணில் பட்டார் இந்த அகில இந்திய பிரபலம்! யார் இவர்? தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள்! KliCk Klick!

(Note: This image is clicked by me .. a few hours ago!)

Another POST is published today in this blog. Read
பிக்காசாவும் பிற்தயாரிப்பு நுணுக்கங்களும்
வலையுலக நண்பர்களுக்கு என் இனிய வணக்கம்,
நம்ம புகைப்பட போட்டி நடந்ததிலிருந்தே பிற்தயாரிப்பு உத்திகளின் (Post production techniques) முக்கியத்துவத்தை நன்று தெரிந்துக்கொண்டேன். சிறிது படத்தில் அங்கே இங்கே மாற்றங்கள் செய்தால் படம் எந்த அளவுக்கு அழகாக மாறி விடுகிறது என்று செல்லாவின் இந்த பதிவை பார்த்தாலே உங்களுக்கு எல்லாம் புரிந்து போயிருக்கும். அப்படிப்பட்ட மாற்றங்கள் எல்லாம் நாமும் செய்ய ஆரம்பித்தால் நம் படங்கள் நாமே கண்டு வியக்கும் அளவுக்கு மாறி விடும்.

அதெல்லாம் சரிதான் கண்ணு!! ஆனா எனக்கு கணிணி பத்தி எல்லாம் பெருசா தெரியாது. படங்கள் எல்லாம் நல்லா வரனும்னு ஆசை தான் அதுக்காக காசு எல்லாம் செலவு செய்து என்னால் மென்பொருள் எல்லாம் வாங்க முடியாது,திருட்டு மென்பொருளும் தரைவிறக்கம் செய்யவும் விருப்பம் இல்லை. அதுவும் இல்லாமல் அதை எல்லாம் நான் மெனக்கெட்டு மணிக்கணக்கா நேரம் செலவழித்து கத்துக்கனும்.மேலும் படங்கள் எடுத்துவிட்டு கஷ்டப்பட்டு இந்த மென்பொருள்களை உபயோகப்படுத்தி வேலை செய்யனும். இதெல்லாம் பார்த்து தான் நான் வேண்டாம்னு முடிவு செஞ்சிட்டேன்னு சொல்றீங்களா???

சரி!!! இலவசமாக ஒரு மென்பொருள். தரைவிறக்கம் செய்துவிட்டு பெரிதாக ஒன்றுமே கற்றுக்கொள்ளாமலே உபயோகிக்க ஆரம்பித்து விடலாம். நம் கணிணியில் உள்ள படங்களை ஒழுங்காக தொகுத்து பார்க்கவும் இந்த மென்பொருள உபயோகப்படும். அதுவும் தவிர மிகச்சில மவுஸ் க்ளிக்குகளிலேயே வெளக்கெண்ணை வழிந்து கொண்டிருக்கும் நம் படங்கள் திடீரென்று உலக அழகி ரேஞ்சுக்கு பொலிவு பெற்று விடும். இப்படியெல்லாம் ஒரு்ரு மென்பொருள் உள்ளது என்றால் தெரிந்துக்கொள்ள கசக்குமா என்ன???
மேலே படியுங்கள்!! :-)

நான் இவ்வளவு பில்ட் அப்புகள் கொடுத்துக்கொண்டிருக்கும் மென்பொருளின் பெயர் பிக்காஸா (Picasa). Idealab என்ற நிறுவனம் தயாரித்த இந்த மென்பொருளை கூகிள் நிறுவனம் 2004-இல் கைப்பற்றியது. அதிலிருந்து இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று இணையத்தில் இட்டது. இந்த மென்பொருளை இந்த தளத்தில் சென்று தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

தரவிறக்கம் செய்துக்கொண்ட பிறகு இந்த மென்பொருள், உங்கள் கணிணியில் உள்ள படங்கள் எல்லாம் தேடிவைத்துக்கொள்ளட்டுமா?? என்று முதலில் கேட்டுக்கொள்ளும். சரியென்ற உடன் கொஞ்ச நேரத்துக்கு உங்கள் கணிணியில் தேடி அலைந்து படங்கள் எல்லாவற்றையும் தொகுத்து வழங்கும்.

திரையின் இடது பக்கம் பார்த்தால் உங்கள் படங்கள் இருக்கும் கோப்பகங்கள் (folders) எல்லாம் பட்டியலிடப்பட்டிருக்கும். வலது புறத்தில் உங்கள் படங்கள் எல்லாவற்றையும் பார்க்கலாம். இடது புறம் நீங்கள் தேர்வு செய்திருக்கும் கோப்பகம் எதுவாக இருந்தாலும் உங்கள் படங்கள் அனைத்துமே வலது பக்கம் தேதிவாரியாக தொகுக்கப்பட்டிருக்கும். நீங்கள் மேலும் கீழும் ஸ்க்ரோல் செய்து உங்களுக்கு விருப்பமான படங்களை பார்த்துக்கொள்ளலாம்.

ஏதாவதொரு படத்தை டபுள் கிளிக் செய்தால் அந்த படம் பெரியதாகி தெரியும்.இடது புறமும் மூன்று டாப்களும் (tabs) அதில் பல்வேறு விதமான பொத்தான்களும் இருப்பதை பார்க்கலாம்.
முதல் tab-ஆன அடிப்படை திருத்தங்களில் (basic fixes) என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாமா??
பிக்காஸாவில் பல்வேறு விதமான உத்திகள் செய்யலாம் என்றாலும் நான் வழக்கமாக பயன்படுத்தப்படும் உத்திகள் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் குறிப்பிடலாம் என்று பார்க்கிறேன். ஏனென்றால் எல்லாவற்றையும் சொன்னால் படிப்பதற்கு போர் அடித்துவிடும் ,அதுவும் தவிர இந்த கட்டுரை வெறும் அறிமுக கடடுரை என்பதால் இந்த மென்பொருளை நீங்கள் உபயோகப்படுத்த ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு நுணுக்கத்தையும் நீங்களே உபயோகப்படுத்தி தெரிந்துக்கொள்ளலாம்.

Crop: இது இந்த மென்பொருளில் நான் பெரிதும் பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று. உங்கள் படத்தின் தேவையில்லாத ஓரப்பகுதிகளை வெட்டி விட வேண்டுமென்றால் உபயோகிக்க வேண்டிய உத்தி இது. அனேகமாக எல்லா படங்களிலும் சற்றே இங்கே அங்கே கழித்தால் படம் சிறப்பாக அமைய வழி வகுக்கும்.எங்கே வெட்ட வேண்டும்,எவ்வளவு வெட்ட வேண்டும் என்பதெல்லாம் உங்களின் சாமர்த்தியம்!! :-)
சில சமயம் தூரத்தில் ஏதாவது படத்தை எடுத்தால் உங்கள் படத்தில் உங்களுக்கு வேண்டிய பொருளை(subject) மட்டும் வைத்துக்கொண்டு மற்றவையெல்லாம் கழித்து விடலாம். ஆனால் Crop செய்யச்செய்ய உங்களின் படத்தின் தரம் குறையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகமான MP-க்கள் உள்ள கேமராவாக இருந்தால் இதை போன்ற கூட்டல் கழித்தல்களை தாங்ககூடிய அளவுக்கு படத்தின் தரம் இருக்கும். சமீபத்தில் கே.ஆர்.எஸ் அண்ணாவிடம் படங்களை பற்றி விவாதித்து கொண்டு இருந்த போது,அவரின் யோசனையின் பேரில் Crop செய்யப்பட்ட ஒரு படத்தை கொஞ்சம் பாருங்கள்.








அடுத்தாக நாம் காணப்போவது "Straighten" எனும் ஒரு கண்ட்ரோல். இதை உபயோகப்படுத்தி ஒரு படத்தை நிமிர்த்தவோ சாய்க்கவோ முடியும். சில சமயங்களில் கேமராவை செங்குத்தாக வைத்துக்கொண்டு போட்டோ எடுப்போம் இல்லையா?? அதை முழுவதுமாக புரட்டி போட "rotate" எனும் கண்ட்ரோல் படத்தின் கீழேயே உள்ளது. அதை இத்துடன் போட்டு குழப்பைக்கொள்ள வேண்டாம். இது சிறிய அளவில் படத்தை பல்வேறு கோணங்களில் நிமிர்த்த உதவும் ஒரு விஷயம். இதை உபயோகப்படுத்தி நாம் படத்தை நிமிர்த்த முற்படும் போது,படத்தின் ஓரங்கள் சில சமயங்களில் அடிபட்டு போய் விடும். அதனால் பொதுவாகவே படம் எடுக்கும் போது நம் பொருளை (subject) சுற்றி நிறைய இடம் விட்டு எடுத்தால் பின்னால் அதை நிமிர்த்துவதற்கோ, crop செய்வதற்கோ வழதியாக இருக்கும். கீழே நீங்கள் நான் சிகாகோ போன போது அங்குள்ள ரயில் நிலையத்தில் எடுத்த படம். சற்றே நிமிர்த்தியதில் எவ்வளவு படம் சிறப்படைகிறது பாருங்கள்.





ஒரு படத்தின் மிக முக்கியமான ஒரு அம்சமே அதன் ஒளி தான். சுலபமாக நாம் இதை சொல்லி விட்டாலும் வெளிச்சத்தின் பாகுபாடு (contrast), நிறம், படத்தின் தெளிவு என பல பரிமாணங்களாக இவை ஒரு படத்தை பாதிக்கின்றன. வானத்தில் இருந்து தேவதை ஒன்று இறங்கி இதை எல்லாவற்றையும் சரி செய்ய ஒரு மந்திரக்கோள் கொடுத்தால் எப்படி இருக்கும்??? அப்படிப்பட்ட ஒரு மந்திரக்கோல்தான் இந்த "Iam feeling lucky" பொத்தான்.

இதை அழுத்தினால் contrast,நிறம் என பலவிதமான விஷயங்களையும் அலசி ஆராய்ந்து பிக்காஸா உங்கள் படத்தை சீர்படுத்தி கொடுக்கும். இது எல்லா சமயங்களிலும் சரியான முடிவை தரும் என்று சொல்ல முடியாது . பெரும்பாலான சமயங்களில் படம் சற்றே dark ஆகி விடும் ,இதை பயன் படுத்தினால். ஆனால் அதை "fill light" போன்ற விஷயங்களை பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம். இந்த "Iam feeling lucky" அதே tab-இல் உள்ள "Auto contrast" மற்றும் "Auto color" ஆகியவற்றின் செயல்பாடுகளை சேர்ந்தே செய்யக்கூடியது என்று சொல்லலாம். நான் எப்பொழுதும் இந்த பயன்பாட்டின் கூடவே "fill light","shadows","highlights" மற்றும் "Sharpen" ஆகிய பயன்பாடுகளை உபயோகித்து என் படத்தின் ஒளி அமைப்பை சீரமைப்பேன். எப்பொழுதும் நாம் படங்களில் ஏதாவது மாற்றம் செய்து காப்பாற்றி (save) வைத்தால்,பிக்காஸா ஒரிஜினல படத்தை தானியாக ் சேமித்து வைத்துக்கொள்ளும் . ஆனால் நான் கன்னா பின்னாவென்று படங்கள் சுட்டு சேர்த்துக்கொண்டதால் இந்த வசதியை அகற்றி விட்டேன். ஆனால் ஏதாவது மாற்றம் செய்வதென்றால் சில சமயம் அதை "save a copy" போட்டு தனி கோப்பாக காப்பற்றிக்கொள்வேன்.

அப்படியே தெரியாமல் காப்பாற்றி விட்டாலும் கூட பிக்காஸாவில் "Undo Save" எனும் வசதி கொண்டு பழைய பட அமைப்பை பெறலாம். நான் இங்கே உதாரணத்திற்காக கொடுத்திருக்கும் பழைய படங்கள் சில அப்படி பெறப்பட்டவை தான்!! இப்படி சும்மா சும்மா save செய்துக்கொண்டிருந்தால் உங்கள் JPEG படத்தின் தரம் குறைந்துக்கொண்டே போகும்.இதனால் JPEG-ஐ Lossy format என்றும் TIFF வகை கோப்புகளை Lossless format என்றும் கூறுவார்கள்.ஆனால் இதை பற்றி எல்லாம் நாம் இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

கீழே நீங்கள் பார்ப்பது ஒரு முறை காரில் வந்துக்கொண்டிருந்த ,மழை பெய்ய துவங்க அப்போது காரின் கண்ணாடியில் வைப்பரின் தெரிப்பை பார்த்த போது எடுக்கப்பட்ட படம். நிறைய ஜூம் செய்ததினாலும்,ஒளி கம்மியாக இருந்ததினாலும் படம் அவ்வளவு தெளிவாக வரவில்லை. ஆனால் மேலே நான் குறிப்பிட்ட கண்ட்ரோல்களை கலந்து அடித்த பின் படம் ஓரளவிற்கு நான் நினைத்த மாதிரி வந்தது.







பிக்காஸாவில் இதையும் தவிர நிறைய உபயோகமான நுணுக்கங்கள் உண்டு. ஆனால் அவற்றை எல்லாம் நீங்கள் உபயோகப்படுத்த உபயோகப்படுத்த தானாக தெரிந்து கொள்வீர்கள்.ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்,எனக்கு தெரியாவிட்டலும் வேறு யாராவது பார்த்து சொல்லட்டும்!! :-)

ஆனால் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த பயன்பாடுகளை உபயோகிக்க வேண்டும் என்பது தான் எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம்.அதற்கு நம் கற்பனையும் பழக்கமும் மட்டுமே உறுதுணை.

ஆனால் உங்கள் கலைத்திறன் பயன்படுத்தி அழகான படங்களை மேலும் அழகுற செய்யவும், ஆங்காங்கே திருத்தங்களை செய்து படங்களை மேலும் சிறப்பிக்கவும்பிக்காஸா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை.
படங்களின் மேல் பிற்தயாரிப்பு நுணுக்கங்களை உபயோகப்படுத்த கிடைக்கும் இன்னொரு இலவசமான மென்பொருள் Gimp. இதை பற்றி நம் AN& ஆங்கிலத்தில் ஒரு தனி வலைப்பதிவே வைத்திருக்கிறார். இந்த மென்பொருளை பயன்படுத்தி Photoshop-ஐ போன்றே பல நுணுக்கமான வித்தைகளை பண்ணலாம். ஆனால் அந்த மென்பொருளை பற்றிய பதிவு வேறு ஒரு சமயத்தில்.
இப்போ நான் உத்தரவு வாங்கிக்கறேன்.

வரட்டா?? :-)

பி.கு: பிக்காசா (Google Pack) download button இந்த பக்கத்தின் கடைசியில் உள்ளது.

Saturday, July 28, 2007

போர்ட்ரைட் படத்திற்கான முக்கியத் தேவைகள் டிஜிடலில் எடுத்தாலும் ஃபிலிம் கேமராவில் எடுத்தாலும் பொதுவானவை.

போட்டி வேற வச்சுட்டம், போர்ட்ரைட் எப்படி எடுக்கறதுன்னு தெரியும் ஆனா அதை எப்படி சிறப்பா கொண்டுவர்ரதுன்னு தெரியலைங்கறவங்க மேலே (அட கீழங்க) படிக்கலாம்.


சின்னச் சின்னக் குறிப்புகள்.
போர்ட்ரைட் படம் எடுக்கும்போதும் நாம் கவனிக்கவேண்டிய காரணிகளில் சில

1 - வெளிச்சம் - ( ligthing)
2 - படத்தில் இடம்பெற இருக்கும் துணியின் அமைப்பு மற்றும் வண்ணங்கள்.
3 - படம் எடுக்கப்படும் பின்னனி. இவையெல்லாம் இருந்தாலும் மிக முக்கியமாக
4 - போட்டோவிற்கு ஒத்துழைக்கும் சப்ஜெக்ட் ( செந்தழல் என்னமோ சொல்ல வரமாதிரி தெரியுது :-? )


முடிந்த வரை சப்ஜெக்டோட eye-contact இருக்கிற மாதிரி முயற்சி செய்யுங்க. இல்லாட்டா போட்டோ வேறெங்கேயோ பாக்கற மாதிரி இருக்கும். கேட்சியா இருக்காது ( சில விதிவிலக்குகள் தவிர்த்து )

கேமராவை சப்ஜெட்டுக்கு மிக அருகில் கொண்டு சென்று போட்டோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நன்றாக வரவேண்டிய போட்டோ.. அலங்கோலமாகி அசிங்கமாக இருக்கும். முக்கியமாக வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ள கேமராக்களில் இது அவசியம். மிக அருகில் இருந்து ஜூம் செய்து எடுப்பதையும் தவிர்த்தல் நலம்.


இரவு நேரங்களில் ஃபிளாஷ் போட்டு எடுக்கும் போது slow sync flash ஆப்ஷனை வைத்து எடுங்கள். இல்லாவிட்டால் பிண்ணனி இருட்டடிப்பு செய்யப்படும்.

அதே போல ரெட் ஐ வராமல் இருக்க red eye ஃப்ளாஷ் ஆப்சன் வைத்து எடுக்கவும். இல்லாவிட்டால் கண்கள் சிவந்து மெட்ராஸ் ஐ வந்ததை விட மோசமாய் வேறு மாதிரி தெரியும்.



குழந்தைகளையும், கேமரா என்றால் கஞ்சி போட்டு விரைப்பாகும் மக்களையும,் சாதாரணமாக போட்டோ எடுக்க வேண்டும் என்றால் வெறுமனே ஃப்ளாஷை சில சமயம் அடித்து வைய்யுங்கள். அப்புறம் அவர்கள் சாதாரணமாவார்கள். அவர்கள் அசந்த நேரத்தில் நன்றாக இருக்கும் படத்தை எடுத்து வையுங்கள்.


" போட்டோ எடுக்கவேண்டும் .. சிரியுங்கள் " இந்த வாசகத்தை உங்கள் அகராதியில் இருந்து அழித்து விட்டு வாய்ப்புக்காக காத்திருந்து படம் எடுங்கள். படம் அற்புதமாக இருக்கும்.

அப்படியே உங்களுக்கு தெரிந்த டெக்னிக்ஸையும் இங்கே போட்டு வையுங்கள் .. மற்றவர்களுக்கு உதவும்.

கீழே உள்ள படத்தை க்ளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்

Thursday, July 26, 2007

நம்மூரு ஸ்டுடியோவுக்குள்ள போட்டோ எடுக்கப்போனா அங்கன ஒரு ஷ்டூல் இருக்கும். அதுல குந்த சொல்லுவார் அந்த போட்டொகிராபர். இங்க பாருங்க... கொஞ்சம்.. தலையை திருப்புங்க... ஒரு க்ளிக்..

நம்ம உம் முன்னு வச்சிருக்கிற மூஞ்சி அப்படியே வரும்... புகைப்படமா... அங்கன கீற 100 படங்களும் இதே மாதிரிதான் போரடிக்கிற மாதி இருக்கும். இன்னா மிஸ்டேக் நடக்குது நம்மளான்டை?... இக்கட சூடு நைனா..

வெள்ளக்காரன் தன்னோட ஸ்டுடியோல எப்படி புச்சிருக்கான்னு பாரு.. போர்ட்ராய்னா அந்த படத்துல ஒரு அழகு உணர்ச்சியிருக்கனும்... இயற்கை அழகு தெரியனும். மொத்தத்துல படம் நம்மகிட்ட பேசனும்!


Tuesday, July 24, 2007



போட்டித்தலைப்பு : போர்ட்ராய்ட் ( PORTRAIT )
ஆரம்பத் தேதி : ஆகஸ்ட் 1 ( starts at 9 am Indian Std Time)
முடிவு தேதி : ஆகஸ்ட் 10 அல்லது முதல் ஐம்பது பதிவர்கள்
நடுவர்கள் : எழுத்தாளர் பாமரன் & ஓசை செல்லா
கவனிக்கப்படும் விசயங்கள் : காட்சி அழகு ( Composition ) & உணர்ச்சிகள் (expressions )
கட்டுப்பாடுகள்: ஒருவர் இரண்டு படம் மட்டுமே அனுப்பலாம்! இந்த ஆசிரியர் குழுவும் கலந்து கலக்க உள்ளது! (என்னைத் தவிர)
உதாரணம்: மேலே உள்ள படத்தை க்ளிக்கி பார்க்க !
மேலும் படித்தறிய : இங்கே செல்லவும்!
சந்தேகம் தெளிய : செந்தழலாரை அணுகவும்! ( Official PRO )
வலையுலகப் புகைப்பட ஆர்வலர்களின் கவனத்திற்கு...

சென்ற போட்டி அறிவிப்பு சிலருக்கு தெரியாமலே போய்விட்டது என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தனர். எனவே மிகவும் முன் கூட்டியே தலைப்பையும் நடுவர்களையும் அறிவித்து விடலாம் என்று முடிவு செய்துள்ளோம். நடுவராக இருக்க பிரபல எழுத்தாளர் பாமரன் அவர்களை தொடர்பு கொண்டேன். "செல்லா, இளைஞர்கள் பலரும் இணைந்து ஆர்வத்துடன் ஒரு காரியத்தை செய்யறீங்க..நான் நிச்சயம் நடுவராகப் பங்குபெறுகிறேன், போட்டியை இன்றே அறிவியுங்க" என்று உறுதியளித்து உற்சாகப்படுத்தினார். (அனைவருக்கும் அவர் ஒரு எழுத்தாளர் என்று மட்டுமே தெரியும்.... தெரியாதது அவரும் ஒரு புகைப்பட ஆர்வலர். ஒரு SLR ( Rebel) எப்பொழுதுமே அவருடன் சுற்றுப் பயணங்களில் பயணிக்கும்! )

சரி இன்னொரு நடுவராக ஆனந்தைப் போடலாம் என்று பாமரனிடம் சொன்னென்.
அவரு எந்த ஊரு ன்னார்... " கலிபோர்னியா" ன்னேன்.
"அப்பா சாமி நமக்கு இந்த சாட், ஈமெயிலுக்கெல்லாம் வசதியோ நேரமோ கிடையாது.. உள்ளூருல யாரையாவது போடு" என்றார்.

அமைதிப்படை சத்தியராஜ் மாதிரி நான் பக்கத்திலேயே கையைக் கட்டிக்கொண்டு "சரிங்க" என்றவனைப் பார்த்து.. அதே மணிவன்னன் ஸ்டைலில்.. "ஏப்பா, நீயே நடுவரா இருந்தின்னா எனக்கும் வசதியாப் போயிரும்ல" என்றார்.

சரி யென்று நானும் MLA பதவிய...ச்சே... (அமைதிப்படை படத்திலேயே மூழ்கிட்டேன்!) ஜட்ஜ் பதவிய.. அட அதாங்க "நடுவர்" பதவிய ஏத்துக்கிடேன்!!

சரி "போட்டியோட தலைப்பு?" நீங்க கேட்கறது நல்லா கேக்குது. அதுக்கு முன்னாடி நம்ம எழுத்தாளரை ரெண்டு வெவ்வேறு பட்ட ஆங்கிளில் பெரிய எந்த் உபகரணமும் இல்லாமல் இருவேறு விதமாகப் படம் எடுத்தேன் சில நாட்களுக்கு முன்பு... ஒன்னுல ஜோல்னா பை எழுத்தாளர் மாதிரியும் ...



இன்னொன்னுல ரஜினியின் அடுத்த பட வில்லன் எஃபெக்டும் வர்ரமாதிரி! இக்கட சூடுங்க...



பாருங்க போட்டுருக்கற சட்டைய கூட மாத்தாம, தலையலங்காரத்த மாத்தாம... ஒரு எழுத்தாளர வில்லனாக்கிட்டேன்! ஒரே ஒரு கிங்ஸ் சிகரெட் + புது ஆங்கிள்...! (இப்ப புரியுதா.. ஏன் பழைய தமிழ் படங்கள்ள வில்லன் எப்பொழுதுமே கையில சிகரெட்டோட தான் வந்தாங்கன்னு! lol!...)

"... அதெல்லாம் சரி.. தலைப்பு" என்கிறீர்களா? .. கொஞ்சமாவது சஸ்பென்ஸ் வேண்டாமா... நாளை காலை... வேண்டாம் இன்னும் 12 மணி நேரத்தில் தலைப்பு, நாள், விதிகள் அறிவிக்கப்பட்டு விடும்!

அட ஒரு க்ளூவாவது குடுத்தா குறைஞ்சா போயிறுவ" ன்னு கேக்கறீங்களா? .. சரி ஒரு க்ளூ தர்றேன்.. "செந்தழல் ரவி அவசரப்பட்டுட்டார் " !

சஸ்பென்சுடன் விடை பெறுவது
ஓசை செல்லா

பிகு: இந்த முறை நடுவரான என்னைத் தவிர ஆசிரியர் குழுவும் களமிறங்குகிறது! சபாஷ்... சரியான போட்டி!

Monday, July 23, 2007

நான் சொன்னேன் இவரது படங்களால் கவரப்பட்டேன் என்று.. ஆனால் எந்தப்படம் என்று சொல்லாததால் அனைவரும் அந்த பாராசூட் என்று நினைத்துவிட்டார்கள். உண்மையில் என் கலர் தாகமுள்ள கண்களுக்கு அந்த சருகு மற்றும் இலைகளின் நிறங்கள் ஒரு ஓவியம் போல் பட்டது. எனது குரு அடிக்கடி சொல்வார்... "சாதாரண மனிதர்களின் கண்ணுக்கு மிக மிக சாதாரணமாகத் தெரியும் ஒன்று ... ஒரு கலைஞனின் கண்ணுக்கு மிக மிக அழகாகத் தெரியும்... காரணம் ஒரு கலைஞனின் கண்கள் ஒரு பொருளில் உள்மறை அழகை ( லடென்ட் பியூட்டி) பார்க்கும் படி பழக்கப்பட்டிருக்கும்!" என்று. எவ்வளவு தீர்க்கமான வரிகள். நல்ல ரசிகனே நல்ல படைப்பாளியாக பரிணமிக்க முதல்படி!

பாண்டி ஆரோவில்லில் ஒரு Earthiness இருக்கும். நம்மூர் காஃபி டேயில் இல்லாத ஒரு அழகு அங்குள்ள கணேஷ் பேக்கரியில் இருக்கும். அது மாதிரி இந்த புகைப்படத்தின் வார்ம் கலர்களின் கலவையில் என் மனதைப் பறிகொடுத்தேன். அனைவரும் பச்சையிலும் நீலத்திலும் மனம் லயித்தபோது இந்த படம் எனக்கு ஒரு ஒளி ஓவியமாகப் பட்டது.

என்னடா ரீல் ... என்று சொல்லாதீர்கள். கீழே என் கண்ணில் பட்டதை இம்ப்ரொவைஸ் செய்திருக்கிறேன்.. க்ளிக் செய்து பெரிதாகப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் அது ஒரு ஒளி ஓவியமா இல்லையா என்று !



அன்புடன்
ஓசை செல்லா
என்னத்த சொல்ல... இவ்வளவு அழகான படங்கள் நம் வலைப்பதிவர்களால் எடுக்கப்பட்டு சர்வேசுவரனுக்கும் சீவீஆர் க்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன! இவர்களுக்கு ஒரு சில காரணங்களால் பரிசுகள் கிடைக்காமல் போயிருக்கலாம்.. ஆனால் அழகான சில படங்கள் சிறிது மாற்றப்பட்டிருந்தால் எப்படி நன்றாக வந்திருக்கும் என்று சர்வேசனும் சீவிஆர் ம் வார்த்தைகளால் சொல்லியிருக்கின்றனர். நான் இதோ படமாகவே காட்டியிருக்கின்றேன். இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று சம்பத்தப்பட்ட பதிவர்களே சொன்னால் நன்றாக இருக்கும்!

ஆனந்தின் படங்களும் வெற்றிபெற்றவர்களின் படங்களும் இதில் இல்லை! ஆனந்த், ஒப்பாரி மற்றும் திலகபாமாவின் படங்கள் என் பேவரைட்! ஏன் என்று பின் சொல்கிறேன்! மற்றவர்களும் பார்த்து இங்குள்ள படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து கருத்தை சொல்லுங்கள்.

குறிப்பு: இடதுபுறப்படத்தை சுட்டி பெரிதாக்கிப் பார்க்கவும்!
ஜூலைப் போட்டி அமக்களமா நடந்து முடிஞ்சிருக்கு. வந்திருந்த படங்களில் பெரும்பான்மை அமர்க்களமா இருக்கு. நான் உங்களுக்கு சொல்லித்தரத விட, நிங்க நெறைய எனக்கு சொல்லித் தரலாங்கர ரேஞ்சுல இருக்கு படங்கள்.

PiTன் (Photography-In-Tamil) ஆசிரியர் குழு பெருசாக நிறைய வாய்ப்பிருக்கு :)

CVRம் நானும் சேந்து, வந்திருந்த 52 பதிவர்களின் படங்களையும் அலசி, இளவஞ்சியின் சூரியகாந்தியை ஜூலைப் படமா தேர்ந்தெடுத்திருப்பதைப் இங்க பாத்திருப்பீங்க.
வாழ்த்துக்கள் இளவஞ்சி!
தீபா, ஜெயகாந்தன் உங்களுக்கும் வாழ்த்துக்கள்! அருமையான படங்கள்!

எல்லா படத்தையும் அலசி, குறை நிறைகளை சொல்லலாம்னு எழுத ஆரம்பிச்சேன் இந்தப் பதிவை.
104 படங்கள் என்பதால், ஒரு லெவலுக்கு மேல, ஸ்ரத்தயூடன் யோசிக்க முடியல. மானிட்டர் முழுவதும் பூ பூவா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. இன்னும் ரெண்டு நாளுக்கு பூக்களைப் பார்க்காமல் இருக்க வேண்டி வரும்னு நெனைக்கறேன் :)

பரிசுக்கான படங்களை தேர்ந்தெடுக்கும்போது, நான் டாப்5, CVR டாப்5 தேர்ந்தெடுத்து, அதனுள் இருந்த படங்களைப் பற்றி விவாதித்து, கடைசியா இளவஞ்சியின் படம் ஜூலைப் படமா தேர்ந்தெடுத்தோம்.

உண்மையில், இதுல பெரிய டெக்னிகாலிடியெல்லாம் சேக்காம, பாத்தவுடன் 'நச்'னு இருக்கர படங்கள முதலில் தேர்ந்தெடுத்து, அதுக்கப்பரம், அதனுள் இருந்த சிறப்புகளை ஆராய்ந்து, கலந்தாலோசித்து எடுத்தோம்.
Very interesting deliberation for a very interesting collection of pictures :)

இயற்கை தலைப்புக்கு படம் அனுப்ப ஸ்கோப் ஜாஸ்தி.
Macro modeல் பூக்களும் வரும், landscape modelல் வனப் பகுதிகளும் வரும்.
300X300ல, என் கம்ப்யூட்டர் மானிடர்ல, பாத்தவுடன், நச்சுனு இழுத்தது, பூக்கள் தான் :)
அடுத்த முறை வேணா, போட்டி விதிமுறைகள் கொஞ்சம் கூட்டிக் கொறச்சு, playing field இன்னும் லெவெலா இருக்க ஏற்பாடூ செய்ய முடியுமான்னு பாக்கரோம் :) அதாவது, எல்லாப் படங்களும் macroல இருக்கணும், இல்லன்னா landscapeல இருக்கணும், DOF கையாளுதல் etc..
இது முதல் போட்டி என்பதால், ஓப்பனா விட்டாச்சு, போகப் போக, டைட்டலாம் :)

சரி, இனி ஒவ்வொரு படத்தை பாக்கும்போதும் என் மனசுக்கு பட்டத, அப்படியே தட்டச்சி கீழ கட்டம் கட்டியிருக்கேன்.

நீங்களும், உங்க ஒவ்வொருவரின் கருத்தையும், கூட்டல் கழித்தலுடன், கீழே விலாவாரியா சொன்னீங்கன்னா, எல்லாரும் எல்லாத்தையும் கத்துக்கிட்டு, ஒண்ணா பெரிய புகைப்பட வித்தகராயிடலாம்.

விமர்சனம், கீகீகீகீகீகீழே.........
























































































































































































































1.இம்சை



அருமையான இடத் தேர்வு. லைட்டிங் இன்னும் கொஞ்சம் பளிச்சுனு இருந்திருந்தா படம் எங்கயோ போயிருக்கும்.

நீல நிர வானம் இல்லாததும் ஒரு பெரிய மைனஸ் ஆனமாதிரி இருக்கு.


ரெண்டாவது படம், 'நச்' மிஸ்ஸிங்.
2. Deepa



தொட்டாச்சிணுங்கிதானே இது?

இத படம் எடுக்கணும்னு தோணற 'கலைக் கண்ணுக்கே' பரிசு கொடுக்கலாம் :)

ஆங்கிளும் அருமை. பக்காவா வந்திருக்கு.

ரெண்டாவது படம், கரெண்டு கம்பு நடுவுல வந்து கெடுத்த மாதிரி ஆயிடுச்சு :(
3, சுரியாள்



முதல் படம் நல்லா வந்திருக்கு. இடது பக்கம், அந்த பூ மேல் ஏதோ 'அழுக்கு' ஒட்டிக்கிட்டிருக்கோ? ஒரு டிஸ்ட்ரேக்ஷன்.

அது தவிர, இந்த மாதிரி, இடமிருந்து வலமாய் செல்லும் படங்கள், பனோரமிக்கா எடுத்தா நல்லா இருக்கும்.

இல்லன்னா, (சிவிஆர்?,செல்லா? செஞ்ச மாதிரி) க்ராப் பண்ணி டச் அப் செய்யலாம்.


ரெண்டாவது, 'நச்' மிஸ்ஸிங்.

வெளிச்சம் குறைத்து, டச் அப் பண்ணிப் பாருங்க, நல்லா வரலாம்.
4. Chalam



இரண்டாவது படத்தின், கலர் காண்ட்ராஸ்டிங் நல்லா இருக்கு.

கேமரா நல்ல கேமரா இல்லியோ? சில விஷயங்கள் விழுங்கிட்ட மாதிரி தெரியுது.

முதல் படம் நல்லா இருக்கு. பூ தான் 'சாதா' பூ, அதனால் கவனம் இழுக்கல :)

5. முத்துலெட்சுமி



நல்ல கேமரால எடுக்கலயோ?

பூ நல்லா இருக்கு, ஆனா, எத மெயினா காட்ட வரீங்கன்னு தெரியாம, படம் முழுவதும் தேட வேண்டியதாயிருக்கு.

'சப்ஜெக்ட்' பக்கம் கவனம் கொண்டு செல்லணும்.


வானம் சூப்பர். நல்ல கேமரால எடுத்து, டச் அப் பண்ணா எங்கயோ போயிருக்கும்.
6. Veyilan



முதல் படம் நல்லா இருக்கு. ஆனா ஏனோ தெரியல, ஒரு பன்ச் இல்லாம இருக்கு. ப்ரௌண் பாரைகள், பச்சையோட சேராம இருக்கோ?

ஒரு முயற்ச்சி செஞ்சு பாருங்க, பாரைய கொரச்சு காட்டர மாதிரி க்ராப் செஞ்சு பாருங்க,.

வேர யாராவது டிப்பு தராங்களான்னு பாக்கலாம்.


ரெண்டாவது படமும் கலர் ப்ரச்சனை தான். ஆடு, ப்ரௌண் மலைல காணாம போயிருச்சு :(
7. Sathanga



நல்ல முயற்ச்சி.

பறக்கும் பறவைகள், டெலி-போடோ லென்ஸ் வச்சு க்ளோஸப்ல எடுத்தா நச்சுனு இருக்கும்.

தூரத்துல இருந்து பாத்தா, அவ்ளோ ஒட்டல :(
8. சிறில் அலெக்ஸ்



அழகான லில்லி, ஆனா லில்லியில் ஒரு செயற்கைத் தனம் தெரியுது. ஏனுங்கோ?

அடுத்த தடவ, கைல ஒரு வாட்டர் பாட்டில் கொண்டு போய், கொஞ்சமா அது மேல தண்ணி தெளிச்சு எடுத்துப் பாருங்க :)

9. An&



பாத்தவுடன் 'நச்சுனு' பார்வைய நிக்க வெக்குது.

'greeting card' quality :)

போதி மரம் அடியில் ஒக்காந்து தியானம் பண்ணா நல்லா இருக்கும். CVR சொலியிருப்பது போல், இன்னும் கொஞ்சம் வலதா இருந்தா 'நச்' கூடியிருக்கும்.

இரண்டாவது படம் அருமை. நீல வானமும், ப்ரௌண் புல்லும் காம்ப்ளிமண்ட்ஸ் ஈச் அதர்.

10. Jayakanthan



முதல் படம் அட்டகாசம். எந்த கேமரா இது?

பூ மட்டும் சிகப்பாவோ மஞ்சளாவோ வேர ப்ரைட்டாவோ இருந்திருந்தா, பின்னியிருக்கும்.

இந்த கலரும் அருமை, ஆனா கொஞ்சம் கம்மியா இழுக்குது :)

படத்தை சுற்றியிருக்கும் ப்ளர்ரிங், அழகுக்கு அழகு.
11. ஒப்பாரி



நேர்த்தியா இருக்கு. ஆனா, வானத்தில் ஒரு 'ஒவர்' டச்சிங் கொடுத்த மாதிரி ஒரு செயற்கைத் தனம். மரம் மட்டும், வெர்டிகலா எடுத்திருந்தா நல்லா வந்திருக்குமோ?

ரெண்டாவது சூப்பர். கலர் டச்சிங் கொடுத்து,ஒரு கோல்டன் கோட்டிங் கொடுத்திருந்தா, எங்கயோ போயிருக்கும் :)
12. Sathia



மரம் தரையிலிருந்து தெரிஞ்சிருந்தா பன்ச் கூடியிருக்கும்.

ரெண்டாவது நல்லா இருக்கு. 'சாதா' பூவானதால, இழுக்கல :)

13. அல்வாசிட்டி விஜய்



நெலா சூப்பரு. ஆனா, இழுக்கல. பட், குட் effort.
'பிறை' எடுத்து பாருங்க, நல்லா இருக்கும். :)


ரெண்டாவது அருமை. லைட்டிங் அட்டகாசம். அந்த பூ மட்டும் கொஞ்சம் பெருசா இருந்திருந்தா, ஏ-க்ளாஸ் ஆகியிருக்கும்.

பூ வளந்துடுச்சுன்னா, திரும்ப ட்ரை பண்ணிப் பாருங்க. :)
14. Ilavanji


அடேங்கப்பா ரகம். என்ன கேமரா?
ஒரே குறை, அந்த நடுவில் தெரியும் இலை. DOF காட்ட இன்னொரு பூவையே முன் நிருத்தியிருக்கலாமே?
ஆனா, அதை அறுத்தெரியாமல், அப்படியே எடுத்த உங்க அக்கரை பாராட்டுக்குரியது :)
நானா இருந்தா, அத ஒடிச்சு எடுத்திருப்பேன் :)
பட்டாம்பூச்சி அழகு. ஆனா, ஏங்கிள் சரியா அமையாத மாதிரி இருக்கு.
15. Yathirigan


நல்லா இருக்கு முதல் படம்.
டச்-அப் பண்ணா நல்லா இன்னும் வரும்.
அது என்னமோ தெரியல, இயற்கைனு வரும்போது, க்ளோஸ்-அப் பூக்கள் அளவுக்கு, landscape படங்கள் அமைவதில்லை. landscape படங்கள் நச்சுனு இருக்கணும்னா, எடம் ஊட்டி மாதிரி இருக்கணுமோ? :)
இரண்டாவதும் நல்ல படம். டச்-அப் தேவை.
16. துளசி கோபால்


சிறிலுக்கு சொன்ன அதே விஷயம்தான் இங்கியும்.
ஒரு செயற்கையா இருக்கு பூ பாத்தா? ப்ளாஸ்டிக் மாதிரி. ஏன்?
17. மின்னுது மின்னல்


இரண்டாவது படம் நல்லா வந்துருக்க வேண்டியது. மரத்த தரையோட சேத்து முழுசா காட்டியிருந்தா நல்லா வந்திருக்கும்.
18. ஜி.ராகவன்


முதல் படம் டூம் லைட் போட்டு மஞ்ச வெளிச்சத்துல எடுத்தா நல்லா வரும். NGல பாத்த ஞாபகம்.
ரெண்டாவது, அட்சரம் பெசகாம வந்திருக்கு. ஆண்டிய தள்ளி நிக்க சொல்லியிருக்கலாம் :)
19. கிவியன்


ரெண்டு படத்துலயும் வெயில் ஜாஸ்தி.
ப்ரைட்னஸ் கம்மி பண்ணிப் பாருங்க.
நல்ல கேமரா இல்லாத குறை மாதிரியும் தெரியுது ?
20. இளா


நல்ல இடத் தேர்வு. கொஞ்சம் டல்லா இருக்கு பாக்க.
வெளிச்சம் கூட்டிப் பாருங்க.
விஷயம் தெரிஞ்சவங்க வேர என்ன பண்லாம்னு சொல்லுங்க:)
21. ஜீவா


கரும்பாரை நல்லாதான் இருக்கு. தடுப்பு சுவர் நடுவுல வந்து கெடுத்திருச்சு.
அந்த வெள்ளள நிறமும் நெருடுது :)
22. விருபா


அடேங்கப்பா என்னமா இருக்கு மரம்.
ஆனா, எல்லா கிளையும் படத்துக்கு வெளிய கவனத்தை இட்டுச் செல்கிறது. அதனால அட்ராக்ஷன் கம்மி ஆயிட்ட மாதிரி ஒரு பீலிங் :(
23. அனுசுயா


அழகான குரங்கு. பேக்ரவுண்ட் தெரியாததால, படத்துக்கு 'நச்' பேக்டர் கம்மி ஆயிடுச்சு :)
குரங்கு சமத்தா இருக்கே. ஒரு க்ளோஸ்-அப் எடுத்திருந்தா, டக்கரா வந்திருக்கும் :)
24. கானா பிரபா


:) நடுவுல என்ன கயிறு? இந்தப் படம் எடுக்க பிராணிகள் எதுவும் டிஸ்டர்ப் பண்ணலயே? :)
ரெண்டாவது படம் கலைத்துவமா இருக்க வேண்டியது, நடுவுல அண்டா, கேன் எல்லாம் வந்து சொதப்பிடுச்சு :)
25. பிருந்தன்


ரொம்ப சிம்பிளா இருக்கு. பழே காலத்து படமோ? இப்ப போய் திரும்ப எடுத்துப் பாருங்க :)
26. Aruna Srinivasan


ஹ்ம். வெளிச்சம் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்தா நல்லா இருந்திருக்கும், இல்லன்னா வெளிச்சம் கம்மியா இருந்து ஒரு சிலுயெட் மாதிரி இருந்திருந்தாலும் நல்லா இருந்திருக்கும்.
27. லொடுக்கு


முதல் படம் நல்லா இருக்கு.
ரெண்டாவது படம் டச்-அப் பண்ணா நல்லாயிருந்திருக்கும்.
28. அமிழ்து


அடடா, நல்ல முயற்சி.
ரெண்டாவது படத்தின் ப்ளாக்&வைட் எடுபடலை.
29. Maya


சூப்பரா இருக்குங்க. கடலின் நிறம் அழக கூட்டுது.
வலது பக்க எக்ஸ்ட்ரா பன மரம் இடிக்குது. வெளிச்சத்த கொறச்சு பாருங்க நல்லா இருக்கும்.
30. grprakash/Pranni


வானம் என்னிக்குமே அழகுதான். ஒரு கோல்டன் டிண்ட் இருந்திருந்தா இன்னும் நல்லா வந்துருக்கும். star filter போட்டு எடுத்தீங்கன்னாலும் அமக்களமா வரும்னு நெனனக்கறேன் :)
ரெண்டாவது படம் அருமை.
31. மதி கந்தசாமி


ரெண்டாவது, ஏதோ வித்யாஸமா ட்ரை பண்ணிருக்கீங்கன்னு தெரியுது. நெனச்சது கெடைக்கலயோ? :)
32. Sen


ம்ம். வலது பக்கம் ட்ரிம் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்கும்.
33. Vaasi


நல்லா இருக்கு ரெண்டும்.
தாத்தா சூப்பர். பாட்டி முகம் பளிச்னு தெரியர மாதிரி ஃப்ளாஷோ, ஆங்கிளோ மாத்தி எடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்.
34. Vasanth


மரத்தினூடே வரும் வெயில் அழகா இருக்கு.
வேற ஏங்கிள்ல எடுத்திருந்தா, வெயிலின் கதிர் தெரிஞ்சிருக்குமோ? அப்படி ஒண்ணு ட்ரை பண்ணிப் பாருங்க, டாப் டக்கர் ரேஞ்சுக்கு இருக்கும்.
35. சிவகுமார்


துளி அழகாத்தேன் இருக்கு.
ரெண்டாவது கலர் காம்பினேஷன் சரியில்லை. ஒரு மஞ்சள் இலை அப்ஸ்ட்ரக்ட் பண்ணுது.
36. வி.ஜெ.சந்திரன்


எனக்கென்னமோ, மரங்கள எடுக்கும்போது, தரையோடு சேத்து தெரியரமாதிரி எடுக்கலன்னா, 'பன்ச்' கொரஞ்ச மாதிரி தெரியுது.
நெலாவா அது?
37. Mayan


'கேமராவ மாத்துங்க சார்னு' பையன் சொல்றான் :)
38. சந்தோஷ்


நல்லா இருக்கு செயில் போட், அந்த பறவையும் அழகக் கூட்டுது.
50mm இன்னும் உள்ள ஜூம் போயிருந்தா, ப்ரேம் போட்டு வீட்ல மாட்டியிருக்கலாம் :)
இரண்டாவது அழகு. அடுத்த முறை, டைம் ஸ்டாம்ப் போடாம எடுங்க :)
39. சாரலில்


நல்ல முயற்ச்சி.
ஆடு, க்ளோஸ்-அப்ல எடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்.
40. Anitha


முதல் படத்தில் டெப்த் இல்லாததால், அழகு கம்மி ஆன மாதிரி தெரியுது.
இரண்டாவது நல்லா இருக்கு.
41. வெற்றி


அடுத்த பஸ் புடிச்சு அந்த எடத்துக்கு போகணும் போல இருக்கு. ஒரு கேரளா படகு நடூல இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.
ரெண்டாவது நல்ல லொகேஷன். நானும் கூட இந்த மாதிரி ட்ரை பண்ணியிருக்கேன், ஆனா சரியா வந்ததுல்ல :(
முன்னாடி தெரியும் தரைய ட்ரிம் பண்ணிப் பாருங்க, புல் இல்லாம தரை எடுபடல.
42. சிவபாலன்


'போட்டோ அனுப்ப' இன்றே கடைசி நாள்னு பாத்துட்டு, அன்னிக்கே எடுத்து அனுப்பிட்டீங்களா?
எடுத்த அவசரம் தெரியுது படத்துல.
43. செந்தழல் ரவி(due to popular demand)


ஒண்ணும் சொல்லரதுக்கில்ல.
ஆயிரம் மரஞ்செடி கொடி எடுத்தாலும், அழகுப் பெண்ணின் போர்ட்ரெயிட்டுக்கு ஈடாகுமான்னு, சொல்லாம சொல்லிட்டீங்க.
என்ன கேமரா இருந்து என்ன பயன்? இந்த மாதிரி ஒரு போட்டோ எடுக்க முடியலன்னா? :)
44. நாடோடி


மங்கலா வந்துடுச்சே?
மேக மூட்டும் ஜாஸ்தி! :)
45. வல்லிசிம்ஹன்


டைனாஸோரும், நாயும் அருமை :)
நேச்சுரலா இருக்கர மாதிரி இருக்கு. ஆனன, பில்டிங் தெரிஞ்சு சொதப்பிடுச்சு :)
46. கைப்புள்ள


பெருசும் சிருசும் அழகா இருக்கு.
பறவையும் அழகு. தண்ணி கலரயும், வானத்துக் கலரையும் கூட்டிப் பாருங்க.
அந்த நடூல இருக்கர பறவைய க்ளோஸ்-அப்பினீங்கன்னா NGக்கு அனுப்பிடலாம் :)
47. Vanthian
அட, நம்ம க்ரேட்டர் லேக்.
தல 'பில்டர்' போட்டு எடுத்தா ப்ளூ ரொம்ப நல்லா வரும்.
நல்ல ப்ரேமிங். ப்ளூ கூட்டினா, ப்ரிண்ட் போட்டு சொவத்துல மாட்டலாம்.
48. Boston Bala


செம எடம். மேக மூட்டம் அதிகமோ?
சும்மா ஒக்காந்து பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.
பட்டாம் பூச்சி உயிரோட இருக்கா? இல்ல, உங்க கலைப் பசிய தீத்துக்க, அத தீத்துட்டீங்களா? மேனகா கிட்ட சொல்லணுமா? :)
எனிவே, பட்டாம் பூச்சி க்ளோஸா எடுக்கணும். கேமரா ஜூம் இல்லாததோ?
49. கண்மணி


அவசரப் படமா?
வீடு நல்லா இருக்கு :)
50. நாட்டு நடப்பு


இந்த மாதிரி அருவி எடுக்கும்போது, ஒண்ணு நைட் மோட்ல போட்டு எடுக்கலாம், இல்லன்னா, ஷட்டர் வேகத்த கொறச்சு எடுக்கலாம்.
அருவி பாக்க அழகா தெரியும்.
51. முகவை மைந்தன்


கொக்கு அட்டஹாசமா வந்திருக்கு.
NGல ஒருத்தரு சொன்னாரு, ப்ராணிகளை எடுக்கும்போது, அது சும்மா இருக்கும்போது எடுக்கக் கூடாதாம், வேற ஏதாவது மூவ்மெண்ட் செய்யும்போது எடுத்துக்கிட்டே இருக்கணுமாம். கேண்டிட்'டா வரும்போது, மிக அழகா இருக்குமாம்.
52. Johan-Paris


வண்டு சூப்பர். ஆனா, கொஞ்சம் பளிச் கம்மி.
பையன் சூப்பரா பளிச்னு வந்திருக்கான்.
"போட்டிக்கெல்லாம் என்ன அனுப்பினா ஒததான்'னு சொல்றானோ? :)

யப்பா, ஒரு டீ சொல்லுபா! :)
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff