Showing posts with label அறிவிப்பு போட்டி photography in tamil contest. Show all posts
Showing posts with label அறிவிப்பு போட்டி photography in tamil contest. Show all posts

Sunday, December 13, 2015

அனைவருக்கும் வணக்கம், 

இம்மாதப் போட்டித் தலைப்பு: மார்கழி

மார்கழி மாதம் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய படங்களை போட்டிக்கு அனுப்பலாம். மார்கழி என்றதும் மழைதான் பொதுவாக நினைவுக்கு வரும். வெள்ளமும் வரலாம். மேலும், பண்டிகைகள் பலவும் இம்மாதத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. கிறிஸ்தவர்களாயிருந்தால் நத்தார், பௌத்தராயிருந்தால் போதி தினம், இந்துவாயிருந்தால் பஞ்ச கணபதி, கோலங்கள், பஜனை, இசை நிகழ்ச்சிகள், யூதாயிருந்தால் ஒளித்திருவிழா என பல விழாக்கள் மார்கழியில் இடம் பெறுகின்றன. எனவே, படத்தைப் பார்த்ததும் மார்கழியை நினைவுபடுத்தக்கூடிய படங்களை அனுப்பி வையுங்கள். 

எடுத்துக்காட்டுக்கு சில படங்கள் இங்கே:

#1

#2

#3

வழமையான போட்டி விதிமுறைகள் இங்கே.


போட்டி அறிவிப்பு தாமதமாகியதால், இம்முறை படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 25 டிசம்பர் 2015

Monday, September 3, 2012

‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு.

பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதாக இருக்க வேண்டும் படங்கள்.

மாதிரிக்கு சில படங்களைப் பார்ப்போமா?

# 1 ராமலக்ஷ்மி


# 2 நவ்ஃபல்


# 3 நவ்ஃபல்


# 4 ராமலக்ஷ்மி


# 5 நவ்ஃபல்


#6 ராமலக்ஷ்மி


#7 ராமலக்ஷ்மி


#8 நவ்ஃபல்


#9 ராமலக்ஷ்மி


#10 நவ்ஃபல்


# 11 ராமலக்ஷ்மி


#12 நவ்ஃபல்


#13 ராமலக்ஷ்மி


போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.

கடைசித் தேதி: 20 செப்டம்பர் 2012
***

Sunday, August 5, 2012

டேங்கரின் டேங்கோ. அழுத்தமான ஆரஞ்சு. இதுதான் 2012 கொண்டாடிக் கொண்டிருக்கும் வண்ணம். பளிச் என ஒளிரும் இந்நிறம் ‘உலகின் பொருளாதாரச் சிக்கல்கள் சரியாகி மக்களின் வாழ்வு மேம்பட வழிவகுத்து, நல்ல விஷயங்களை நோக்கி உற்சாகமாக நம்மை நகர்த்தும்’ என்பது இதைத் தேர்ந்தெடுத்த வல்லுநர்களின் கருத்து. வண்ணத்துக்கும் வாழ்வுக்கும் என்ன சம்மந்தம்? கேள்வி எழும்பினாலும் நல்லதொரு நம்பிக்கையை விதைக்கும் விஷயத்தை நாமும் கொண்டாடி விடுவோமே:)!

இம்மாதத் தலைப்பு: ஆரஞ்சு (இளஞ்சிகப்பு)

கொண்டாடலாம் வாங்க!

கவனிக்க வேண்டியவை: சிகப்பை ஏற்கனவே சீரும் சிறப்புமாக நாம் கொண்டாடி விட்டுள்ளோம். இப்போது வண்ணம் சிகப்பை நோக்கிச் சாய்ந்திடாமல் ஆரஞ்சுக்கு.. இளஞ்சிகப்புக்கு.. முக்கியத்துவம் கொடுக்கட்டும். பிரதானமாக ஈர்க்கும் கருப்பொருள் அல்லது வண்ணம் ஆரஞ்சாக அமையட்டும். அருமையாய் படமாக்கிட ஐநூறு பதிவுகளை(அதைத் தனியாகப் பிறகு நாம் கொண்டாடிலாம்) நெருங்கிக் கொண்டிருக்கும் PiT தளத்தில் பாடங்களுக்கா பஞ்சம்:)? எல்லா நுணுக்கங்களையும் கருத்தில் கொண்டு அழகழகான ஆரஞ்சுடன் வாருங்கள்!

சில மாதிரிப் படங்களைக் பார்ப்போம்.

#1 ராமலக்ஷ்மி



# ஆனந்த் விநாயகம்


# ராமலக்ஷ்மி



# நாதஸ்


# ராமலக்ஷ்மி


# ஐயப்பன் கிருஷ்ணன்


# சர்வேசன்

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.

படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 20 ஆகஸ்ட் 2012.

பி.கு: சில மாதம் தேதி 15 ஆக, சில மாதம் 20 ஆக அறிவிப்பாவது சிலருக்குக் குழப்பத்தைத் தருவதால் எளிதாக நினைவில் நிற்க, இனி வரும் எல்லா மாதங்களிலும் 20ஆம் தேதியே கடைசித் தேதியாக இருக்கும்.

Sunday, July 1, 2012

வணக்கம் நண்பர்களே,
மீண்டும் உங்களை மாதாந்தப் போட்டியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
  • இந்த மாதத் தலைப்பு "காகிதம்".
  • போட்டிக்கான விதிமுறைகள் இங்கே
  • படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 15-07-2012


தலைப்பு: காகிதம் (paper)
காகிதம் அல்லது தாள் அல்லது கடதாசி இந்த தலைப்புக்கு ஏற்ற படங்களை முடிவுத் திகதிக்குள் அனுப்பி விடுங்கள். காகிதத்துடன் தொடர்புடைய எதுவும் படமாக அமையலாம். புத்தகம், ஒரிகாமியில் செய்யப்பட்ட காகித உருவங்கள், பணம் (நோட்டுத்தாள்), காகிதத்தால் சுற்றப்பட்ட பொருட்கள், செய்தித்தாள் சுவரொட்டி, இப்படி எதுவாகவும் இருக்கலாம்.


தலைப்புக்குப் பொருந்தமான படம் எடுத்தால் பாதி வெற்றி. மீதி வெற்றி ஒளிப்படக்கலையின் அடிப்படைகளையும் நுட்பங்களையும் அதில் உள்வாங்கியிருப்பது. இறுதியில் படைப்பாற்றலை (creativity) பயன்படுத்துவது. இதையெல்லாம் எங்கு கற்பது? இங்கேயே கிட்டத்தட்ட 500 பதிவுகள் உள்ளன. நிச்சயம் அவை உங்களுக்கு உதவ முடியும்.


தலைப்பிற்கு சில உதாரணங்கள் பின்வருமாறு:


# நவ்ஃபல்


# நவ்ஃபல்

# நவ்ஃபல்

# ராமலக்ஷ்மி

Thursday, May 3, 2012

அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்!

இந்த மாத போட்டிக்கு என்னை சிறப்பு நடுவராக தேர்ந்தெடுத்ததற்கு பிட் குழுவிற்கு நன்றி! 2007 டிசம்பரில் இருந்து பிட் போட்டியில் பங்கேற்று வந்துள்ளேன். இது எனக்கு ஐந்தாவது வருடம். இங்கிருந்து தான் நிறைய கற்று கொண்டேன். இப்போ நானே இதுல ஒரு நடுவரா செயல்படறது ரொம்ப சந்தோஷம்.

இந்த மாதத்திற்கான போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள். சவாலான தலைப்பு கொடுக்க போறேன்னு வேற பில்ட் அப் கொடுத்துருக்காங்க. இப்போ போட்டிக்கு வர படங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு சவாலான தலைப்பு கொடுக்கறது தான் பெரிய சவால்னு நினைக்கிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். இந்த மாத தலைப்பு "காற்று". படத்தில் காற்றின் தாக்கம் தெரியும் படி இருக்க வேண்டும்.
போட்டிக்கான விதிமுறைகள் இங்கே

படம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20-05-2012

நட்புடன்
சத்தியா.




----------------

மாதிரி படங்கள்

# படம் 1: Anton (சிறிய மின்விசிறி)



# படம் 2: Sathiya

# படம் 3: Sathiya

# படம் 4: Ramalakshmi

# படம் 5: Ramalakshmi



# படம் 6: Iyappan Krishnan



# படம் 7: Andrew @CubaGallery

# படம் 8: Agnese Eva Montecchi









[Photographs 7,8,9,10,11... Thanks to the links!]

மீண்டும் நினைவூட்டுகிறோம்:

படங்களை 111715139948564514448.submit@picasaweb.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பாக அனுப்பவும். கூடவே photos.in.tamil@gmail.com முகவரிக்கு cc அனுப்பவும்.

படங்கள் 1024x768 எனும் அளவில் படங்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் நல்லது. அது எப்படின்னு தெரியலைன்னா இந்த பதிவை படிச்சி பாருங்க.

Thursday, February 2, 2012

சௌக்கியமா நண்பர்களே? பிப்ரவரி மாத போட்டிக்கு ரெடிதானே?போட்டிக்கு வரும் படங்களை பார்ப்தில் இருக்கும் சுவாரஸ்யத்தை போலவே, ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு ஆராய்வதில் இருக்கு.

கிட்டத்தட்ட, எல்லா மாதிரியான தலைப்பையும் பிட்டில் அரங்கேற்றியாச்சு.

ஒரு ஆல்பத்தில் படங்களைப் பார்க்கும்போது, ஒவ்வொரு விதமான படமும் ஒவ்வொரு விதமான ரசனையை வெளிப்படுத்தும். Landscape மாதிரியான படங்களைப் பார்க்குமபோது, படத்தில் பல விதமான விஷயங்கள் பொதிந்து இருக்கும். நிறங்களும், வெளிச்சத்தின் அழகும், காடு மலைகளும், காண்பதற்க்கு ரம்யமாகவே இருக்கும். ஆனா, பார்வையாளன், உன்னிப்பாய் ஆராய படத்தில் ப்ரத்யேகமாய் ஒன்றும் இருக்காது.
பார்வையாளனுக்கும், படத்துக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்காது. பொத்தாம் பொதுவா மேலோட்டமா பாத்துட்டு உச்சு கொட்டிட்டு அடுத்த படத்துக்கு போயிருவான்.

அதுவே, புகைப்படம் ஏதாவது ஒரு சப்ஜெக்ட்டை அருகாமையில் சென்று, அந்த சப்ஜெக்ட்டின் நுணுக்கங்களைக் காட்டினால், பார்வையாளனுக்கு படத்தின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படும்.


குழந்தையின் முகமோ, கைகளோ, பூக்களின் மேலிருக்கும் வண்டோ, பறவையின் கூரிய பார்வையோ, பெண்களின் புருவமோ, மீசைக்காரரின் வசீகரச் சிரிப்போ, பாட்டியின் சுருங்கிய விரல்களோ, மீனோ, மானோ, பளீர் தக்காளியோ, சில்லென்ற கோக் பாட்டிலோ, ஃபுல் மீல்ஸோ, எதுவாக இருந்தாலும், அருகாமையில் சென்று அதன் விவரங்களைப் பதிந்தால், அந்தப் புகைப்படத்துக்கு ஒரு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்.

புரிஞ்சுடுச்சு இல்ல?

பிப்ரவரிக்கான தலைப்பு - அண்மைக் காட்சி (Close-Up)

(இயன்றவரை 'மேக்ரோ'வைத் தவிருங்கள்)

விதிமுறைகள் இங்கே

கடைசித் தேதி: பிப்ரவரி 20.

ஜமாய்ங்க!

சில மாதிரிகள்:

Surveysan
Parrot

Anton:

Three-Spot Grass Yellow (Eurema blanda)

Nathas:

Goosling

surveysan

Dahlia

Ramalakshmi:


கார்த்திகை முழுநிலவு / Full Moon, Dec 2011

Anton:
Spin


Ramalakshmi:
மூக்கும் முழியுமாய்../ Blue-and-yellow Macaw (Ara ararauna)


Jeeves:
neighbour's son.





 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff