Tuesday, November 27, 2007

இந்த பதிவை எந்த கேமரா வாங்கலாம் என்ற எமது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக கொள்ளலாம்.
கேமரா வாங்க முடிவெடுக்கும் பல பேரிடம் ஏற்படும் குழப்பங்களில் "DSLR வாங்கலாமா அல்லது Point and shoot வாங்கலாமா" என்ற குழப்பம் முதன்மையானது. போன பதிவில் சொன்னது போல இதற்கான முடிவை உங்களுக்கான ஆர்வம்,திறமை,புகைப்படக்கலையை கற்றுக்கொள்ள நீங்கள் எவ்வளவு நேரம்/முயற்சி எடுக்க தயாராக இருக்கிறீர்கள் என்பதை பொருத்து நீங்களே தான் எடுக்க வேண்டும். இதற்கான முடிவை என்னாலேயோ அல்லது உங்கள் நண்பர்களிலாயோ எடுக்க முடியாது. DSLR கேமராக்களின் விலை மற்றும் அதை பராமரிக்க/உபயோகிக்க தேவைபடும் பொறுமை/கூடுதல் முயற்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நான் என்னிடம் ஆலோசனை கேட்பவர்களிடம் High end point and shoot -ஐயே வாங்க சொல்லி விடுவேன்.உங்களிடையே ஏற்கெனவே கேமரா உள்ளதா???அதில் உள்ள பயன்பாடுகள் என்னென்ன?? உங்களுக்கு புகைப்படக்கலை குறித்த அடிப்படை விஷயங்கள் தெரியுமா?? என்பதெல்லாம் தான் நீங்கள் யோசிக்க வேண்டிய விஷயங்கள்.

இருந்தாலும் DSLR-க்கும் point and shoot-க்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்கள் என்ன என்பதை விளக்குவதற்காக எழுதப்பட்ட பதிவு தான் இது.
இது பொதுவாக இருக்கும் SLR மற்றும் point and shoot கேமராக்களை கருத்தில் கொண்டு எழுதப்பட்டது.இப்பொழுதெல்லாம் கன்னா பின்னாவென்று high end point and shoot கேமராக்கள் சந்தையில் வருவதால் சில விஷயங்கள் இந்த கேமராக்களுக்கு பொருந்தாமல் போகலாம்! :-)

முதலில் SLR கேமரா என்றால் என்ன என்பதை தெளிவாக தெரிந்துக்கொண்டு விடலாம் வாருங்கள். SLR என்பது single lens reflex என்பதன் சுருக்கம். இதற்கு முன் ஒரு Digital-ஐ சேர்த்து விட்டால் DSLR. கேமராக்களில் உள்ள னெல்ஸ்களை கழட்டி மாற்றி போட்டுக்கொள்ள முடியும் என்பது தான் SLR கேமரக்களில் உள்ள அடிப்படை சிறப்பு.Point and shoot-இல் அப்படி கிடையாது. ஒரே லென்ஸை தான் கட்டிக்கொண்டு அழ(சிரிக்க) வேண்டும்.அதுவுமில்லாமல் SLR-இல் லென்ஸில் நுழையும் ஒளியை நேரடியாக view finder-இல் பார்த்து படத்தை எடுப்போம். ஆனால் point and shoot கேமராவில் லென்ஸ் வழியாக வரும் ஒளி பிரதிபலிக்கப்பட்டு LCD-இல் தனியாக காண்பிக்கப்படும். அதனால் SLR கேமராக்களில் படம் எடுக்கும் போது தெரியும் காட்சி தான் நம் சென்சரில் விழும் ஒளி . இதுதான் SLR-க்கும் point and shoot-க்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்.இப்பொழுது இந்த கேமராக்களில் உள்ள மற்ற வித்தியாசங்களை பார்க்கலாம்.

படங்களின் தரம்:
படங்களின் தரம் என்று வரும்போது கேமராவின் megapixel (MP) என்பது மிக முக்கிய அளவுகோலாக கருதப்படுகிறது.இப்பொழுதெல்லாம் பல point and shoot கேமராக்களில் அதிக அளவிலான (8-10 MP) MP ரெசல்யூஷன்கள் வர ஆரம்பித்து விட்டன. ரெசல்யூஷன் ஒரே அளவாக இருந்தாலும் சென்ஸரில் உள்ள புள்ளிகளின்(pixels) அளவை (size) பொருத்து படங்கள் பதியப்படும் திறனும் மாறுபடும். Point and shoot கேமராக்களில் உள்ள சென்சர்களில் உள்ள புள்ளிகள் SLR-களில் உள்ளதை விட சிறியதாக இருப்பதால் அவற்றால் அவ்வளவாக ஒளியை பதிய வைக்க முடியாது. அதனால் ஒரு 10MP point and shoot கேமராவில் எடுக்கப்பட்ட படம் ஒரு 8MP SLR கேமராவில் எடுக்கப்பட்ட படத்தை விட தரத்தில் அதிகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.ஆனால் நீங்கள் படத்தை பிரிண்ட் செய்யப்போவதில்லை என்றால் அதிகபட்ச ரெசல்யூஷனால் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் வந்து விடாது.ரெசல்யூஷன் அதிகமாக அதிகமாக கோப்புகளின் அளவும் அதிகமாகிக்கொண்டு போகும் என்பதை மறக்க வேண்டாம்!! :-)

லென்ஸ்கள்:
SLR கேமராவில் உள்ள லென்ஸ்களின் தரம் point and shoot கேமராக்களில் உள்ள லென்ஸ்களை விட தரத்தில் சிறந்ததாக இருக்கும். இதனால் SLR கேமராக்களில் குறைந்த ஒளியிலும் focus செய்யும் திறனும் ,ஒளியை திறட்டும் திறனும் சிறந்து காணப்படும்.இதனால் படங்கள் சிறப்படைய வாய்ப்பு உள்ளது. DSLR லென்ஸ்களில் எடுக்கும் படங்களில் point and shoot கேமராக்களை விட அதிகமான DOF கிடைப்பதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
அதுவுமில்லாமல் SLR-களில் உங்கள் தேவைக்கேற்ப லென்ஸ்களை மாற்றிப்போட்டுக்கொண்டு விதவிதமான ரகமான(landscape,sports,macro) படங்களை எடுக்கலாம். இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் நீங்கள் லென்ஸ்களை மாற்றி மாற்றி போடும் வேளைகளில் கேமராவுக்குள் தூசி புகுந்து சென்சரில் படிந்துக்கொண்டால் நிறைய காசு செலவு செய்து சுத்தம் செய்ய வேண்டும்.

கையாளுமை:
SLR கேமராக்களோடு ஒப்பிடும் போது point and shoot கேமராக்கள் சிறியதாகவும் எடை குறைவாகவும் இருக்கும். அதனால் அவசரமான சமயத்தில் கூட சட்டென பையில் இருந்து வெளியே எடுத்து பட்டென படம் பிடித்து விடலாம்!! ஆனால் SLR-களின் அளவும் பெரியது,எடையும் அதிகம். புகைப்படக்கலை மேல் தீவிரமான ஆர்வம் இல்லாத பட்சத்தில் இரண்டு மூன்று மாதங்களில் அதை வெளியே எடுத்து படம் பிடிப்பதே அலுப்பாகி விடும்.ஆர்வம் மட்டும் இல்லையென்றால் ஆசையாக இருக்கிறதே என்று பணம் கொடுத்து வாங்கி விட்டு பிறகு ஏனடா வாங்கினோம் என்று ஆகிவிடும்.
அதுவும் தவிர point and shoot கேமராக்களில் படம் எடுக்கும் போது காட்சி LCD திரையில் தெரியும் என்பதால் view finder-இல் பார்த்து்பார்த்துபாபாபார்த்து தான் படம் எடுக்க வேண்டுமென்பது இல்லை.இதனால் உங்களால் SLR கேமராக்களில் எடுக்க முடியாத பல கோணங்களில் உங்கள் point and shoot கேமரா மூலம் எடுக்கலாம்.

சத்தம் மற்றும் வேகம்:
நீங்கள் SLR கேமராக்கள் உபயோகிக்கும் போது கவனித்தீர்கள் என்றால் ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் "கிரக்" என்று ஒரு விதமான சத்தம் எழும். SLR கேமராக்களின் உள்ளே நடக்கும் செயல்பாடுகளால் உருவாகும் சத்தம் தான் அது.இந்த சத்தம் point and shoot கேமராக்களில் வராது. சில point and shoot கேமராக்களில் செயற்கையாக ஒரு விதமான சத்தம் சேர்க்கப்பட்டிருக்கும்.சில பேருக்கு இந்த சத்தம் இருப்பது பிடிக்கும்.படம் எடுக்கும் போது ஏதோ ப்ரொபெஷனல் புகைப்படக்காரரை போல "கெத்தாக" இருக்கும் என்று நினைப்பார்கள்.ஆனால் இது அவரவர் விருப்பத்தை பொருத்தது.
டிஜிட்டல் கேமராக்களில் நீங்கள் படம் எடுக்கும் போது,நீங்கள் பொத்தானை அழுத்தி சிறிது நேரம் கழித்து தான் படம் எடுக்கும்.இதற்கு ஆங்கிலத்தில் "shutter lag"என்று கூறுவார்கள்.அதுவும் இல்லாமல் கேமராவை ஆன் செய்த வுடன் கேமரா தயாராகி நாம் உபயோகிக்க சில நேரம் ஆகும். படம் எடுத்த பின் அதை மெமரி அட்டையில் எழுத சிறிது நேரம் பிடிக்கும்.இந்த பிரச்சினைகள் எல்லாம் SLR கேமராக்களில் மிகக் குறைவு. அதுவும் shutter lag அறவே இருக்காது என்றே சொல்லலாம்.

பயன்பாடுகள்:
SLR கேமராக்கள் உருவாக்கப்படும் போதே அதை பயன்படுத்துபவர் புகைப்படக்கலை பற்றிய அடிப்படை அறிவு உடையவர் என்று அனுமானித்துக்கொண்டு உருவாக்குகிறார்கள். இதனால் ஒரு படத்தை பாதிக்கும் வெவ்வேறு அம்சங்களையும் தனியே மாற்றி படத்தை நமது இஷ்டம் போல் இதில் பதிய வைக்க முடியும். என்னதான் இப்பொழுதுள்ள high end point and shoot கேமராக்களில் வித விதமான mode-கள் வந்திருந்தாலும் SLR கேமராக்களில் இருப்பது போன்று இதில் எல்லா அம்சங்களையும் நமது இஷ்டம் போல் மாற்ற முடியாது. ஆனால் இந்த கலையை கற்றுக்கொள்ள அவ்வளவாக ஆர்வமில்லாதவருக்கு SLR கேமராவின் எக்கச்சக்கமான கண்ட்ரோல்கள் சலிப்பை தரலாம்.
அதுவுமில்லாமல் புகைபடக்கலையின் வெவ்வேறு அம்சங்களான ISO,shutter speed போன்றவை SLR கேமராக்களில் கொஞ்சம் அதிகமாகவே ஏற்றி இறக்கிக்கொள்ள முடியும்.ஆனால் ISO,shutter speed இவையெல்லாம் என்னவென்றே தெரியாதவர்கள்/தெரிய விருப்பமில்லாதவர்கள் இதை பற்றி எல்லாம் கவலை படாமல் point and shoot கேமரா வாங்கிக்கொள்ளலாம்.

பதிவு ரொம்ப பெருசாயிட்டே போகுது,அதனால இத்தோட நிறுத்திக்கறேன். POint and shoot கேமராக்களை விட SLR கேமராக்கள் விலையிலும் அதிகம் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை.அதுவுமில்லாமல் point and shoot போன்று இல்லாமல் SLR கேமராக்களில் லென்ஸ்,பில்ட்ர்,லொட்டு லொசுக்கு என்று கண்ணுக்கு தெரியாத கூடுதல் செலவுகள் பல உண்டு.
இப்படி SLR-க்கும் point and shoot-க்கும் வித்தியாசங்கள் நிறைய உண்டு.அதனால் பொறுமையாக பதிவை படித்து விட்டு உங்களுக்கு எந்த கேமரா வேண்டும் என்று முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
தவிர உங்களுக்கு இந்த தலைப்பை பற்றி வேறு எதுவும் தோண்றினால் பின்னூட்டமிடுங்கள்,கதைக்கலாம்!! :-)
வரட்டா??? :-)

படம் மற்றும் வழிகாட்டுதல்:
http://digital-photography-school.com/blog/should-you-buy-a-dslr-or-point-and-shoot-digital-camera/

Sunday, November 25, 2007

முதலிடம்: ஸ்ரீகாந்த்

இரண்டாமிடம்: உண்மை + சிவசங்கரி

மூன்றாமிடம்: ஜவஹர்






வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியைப்பற்றிய ஒரு சிறு அலசல் இன்னும் ஒன்றிரண்டு நாளில்...

Thursday, November 22, 2007

வணக்கங்க.

போட்டியின்னு வந்துபுட்டா சிங்கம்ன்னு சொல்லி ஆளாளுக்கு வழக்கம் போல கலக்கிட்டீங்க. களத்துல குதிச்ச எல்லாருக்கும் நன்றீங்க.

ஒவ்வொரு போட்டியிலயும் படங்களோட தரம் கூடிகிட்டே இருந்தாலும் சில படங்கள்ல இன்னமும் அந்த classic mistakes இருக்குங்க. முதலாவது, போட்டிக்கான தலைப்போட பொருந்தாத படங்கள். போட்டியோட தலைப்பு சாலைகள். ஆனா ஏதோ ஒரு மூலைல ரோடு இருக்குங்கற காரணத்துக்காக ஒரு படம் இந்த தலைப்புல வராது இல்லைங்களா? எங்களோட முதல் சுற்றுலயே சில படங்கள் இந்த காரணத்துனால out. அடுத்து, பிற்தயாரிப்பு. ஐஸ்வர்யா ராய் எவ்வளவு அழகா இருந்தாலும் பவுடர் பூசிட்டுதான கேமரா முன்னாடி வராங்க? பிற்தயாரிப்புங்கறதும் அது போலதாங்க. என்னதான் படம் அழகாயிருந்தாலும், அத Picasa மாதிரியான சாப்ட்வேர் வெச்சி பவுடர் பூசிவிட்டாக்க, சும்மா திருவிழாக்கு வந்த முத்தழகு மாதிரி மின்னும். அடுத்த போட்டிக்கு படங்களை அனுப்பறதுக்கு முன்னாடி இத முயற்சி பண்ணி பாருங்க.

மெயின் மேட்டருக்கு வருவோம். ஒரு சில படங்கள விட்டுட்டு பார்த்தா மீதி எல்லாமே கலக்கல் தான்ங்க. எல்லா படங்களையும் தனித்தனியா/ஒரே சாய்ல்ல இருக்கறத குரூப்பா/மொத்தமா பார்த்து ரவுண்டு கட்டி எடுத்ததுல இந்த பத்து படம் வந்து இருக்கு.




இதுல எது பரிசு வாங்கும்ன்னு உங்கள மாதிரியே எங்களுக்கும் தெரியல. ரெண்டு மூனு நாள்ல முடிவு பண்ணிடுவோம். பரிசு வாங்கப்போறவங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)

Friday, November 16, 2007

இரவு புகைப்படக்கலையில் முதல் பாடத்தை படிச்சி இருப்பீங்க. இப்ப இரண்டாவது பாடத்திற்கு போகலாமா? இந்த முறை சொந்தமாக கற்றுக்கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த தீபாவளிக்கு எப்படியும் நல்ல படங்கள் எடுத்துவிட வேண்டும் என்ற ஒரு ஆவலில் இருந்தேன். மொட்டை மாடிக்கு சென்று வானத்தில் அழகாக மின்னிய நடசத்திரங்களுடன் தானும் சில நொடிகள் மின்னிய பட்டாசுகள் கண்ணை கவர்ந்து இழுத்தது. எப்படியும் பிடித்துவிடலாம் என்று இருந்த எனக்கு ஏமாற்றம் தான் மிச்சம். ஒரு படம் கூட சரியாக பதியவில்லை. சுமார் முக்கால் மணி நேரம் சொடுக்கி சொடுக்கி வெறுத்தே போனது.
முக்காலியில் அவசியம் அப்போது தான் உறைத்தது. வீட்டின் முன்னே அழகான composition. ஆனால் கைகளில் வைத்து சொடுக்கிய போது நிறைய ஷேக்குகள் படத்தில் தெரிந்தது. பின்னர் கைப்பிடி சுவரில் மீது வைத்து சொடுக்கினேன். கொஞ்சம் ஆபத்தான செயல் தான். கொஞ்சம் தவறினாலும் கிளிக்கிற்கு பதில் டமால் தான்.
Mode : Manual : F/4 : Exposure Time : 5 sec

இரவுப்புகைப்படக்கலையில் முக்காலியின் அவசியம் இப்போது உணர்ந்திருப்பீர்கள். மிக நல்ல படங்களை தவறவிட்டுவிடுவோம்.


சிறிது நேரம் கழித்து இரவு பட்டாசுகளை வீட்டில் வெடிக்க ஆரம்பித்தார்கள். பட்டாசுகளை முதல்முறை படம் பிடிப்பதால் எப்படி எங்கு படம் பிடிப்பது என்று தெரியவில்லை. ஆனால் அந்த வெளிச்சத்தில் தெரியும் முகங்கள் பார்க்க அழகாக இருக்கும். அடுத்த முறை முயற்சித்து பாருங்கள். Program மேடில் இருந்து Manual மோடிற்கு மாறினால் இரவு புகைப்படங்கள் பிரமிக்கும் வகையில் கிடைக்கும். அப்படி கிடைத்தது தான் கிழே உள்ள புகைப்படங்கள். அனைத்தும் Manual Modeல் எடுக்கப்பட்டது. எடுக்கும் படத்திற்கு ஏற்ப Exposure நேரத்தை மாற்றிக்கொள்ளவும். Prolonged Exposure என்று இதனை சொல்கிறார்கள்.


எங்கோ ஓரு புத்தகத்தில் வேகமாக செல்லும் பேருந்து, வாகனத்தின் பாதையை (trail) இந்த மோடில் எடுக்கலாம் என்று சொல்லி இருந்தார்கள். அந்த படிப்பினையை கொண்டு எடுத்த படங்கள் இவை.


இப்படிப்பட்ட படங்களுக்கு புகைப்படிப்பவருக்கு இணையாக அந்த பட்டாசுகளை வைத்து வடிவங்கள் கொடுப்பவரின் பங்களிப்பும் அவசியமானது.

-விழியன்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்த்தலில் அதிக வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்ற அண்ணன்..... மன்னிக்கனும் ஏதோ நியாபகத்தில் எழுதிவிட்டேன். நிஜமாக ஒரு பெரும் பாரம் தலையில் இருப்பது போன்ற ஓர் உணர்வு. அற்புதமான படங்கள். நண்பர்கள் மேற்கொண்டுள்ள சிரமம், நேரம், கவனிப்பு, கவனம் அனைத்தும் புகைப்படங்களில் தெரிகின்றது. மாதாமாதம் நிச்சயம் புகைப்படங்களில் தரங்கள் உயர்ந்து கொண்டே வருவது இந்த வலைப்பூ ஆரம்பித்ததின் நோக்கத்தினை நிறைவேற்றுவதாகவே படுகின்றது.

சில படங்கள் சட்டென்று கவிதையினை மனதில் பதித்துவிட்டு செல்கின்றது, சில படங்கள் நாம் அங்கு செல்ல வில்லையே என்று எங்க வைக்கின்றது. சில படங்கள் சாலைகள் என்னும் தலைப்பிட்டிருந்தாலும் அதையும் தாண்டி ஏதோ சொல்வதாக இருக்கின்றது. போட்டியில் யார் வெற்றி பெருகின்றார்களோ இல்லையோ அது இரண்டாம் பட்சம், ஆனால் ஒவ்வொருவரின் முயற்சியுமே முதல் வெற்றியாகும்.
முதல் பத்து சிறந்த படங்களை இன்னும் சில நாட்களில் வெளியிடுகின்றோம். அதுவரை.......

Monday, November 12, 2007

PITன் (Photography-in-Tamil.blogspot.com aka தமிழில் புகைப்படக் கலை) நவம்பர் மாதப் போட்டிக்கு 'சாலைகள்'னு தலைப்பு. (இதுவரை அனுப்பாதவங்க, படத்தை அனுப்ப மறந்துடாதீங்க. உடனே க்ளிக்கி அனுப்புங்க).

என் சமீபத்திய 'ஆன்மீக' ட்ரிப்பின் போது க்ளிக்கிய சில சாலைகளின் பகிர்வை பதியலாம்னு தோணிச்சு. ஊர் சுத்தும்போது, எந்த சாலையைப் பார்த்தாலும், PITன் போட்டி நெனப்புதான் வந்தது.

புது காமிராவும் கைவசம் இருந்ததால் (Canon Rebel XTI - நல்ல காமிரா, $666 - ஆனா, கூட ஒரு $400 போட்டீங்கன்னா Nikon D80 கெடைக்கும். அது இத்த விட ஜூப்பரா இருக்கு), க்ளிக்கித் தள்ள வசதியா இருந்தது.

PITக்காக பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே, ஏதாவது ஒரு ஐடியா அள்ளி விடலாம்னு யோசிச்சேன். ஒண்ணும் பெருசா தோணல. சமீபத்திய ட்ரிப்பில் உணர்ந்த ஒரு உணர்தலை இங்கே பகிர்கிறேன் ;)

அதாவது, படம் எடுக்க நல்ல கேமரா மட்டும் போதாது, சிறந்த கலைப் பார்வை வேணும். ஒரு காட்சியப் பாத்தா, அத எப்படி படமாக்கினா நல்லா இருக்கும்னு மனசுல படம் போட்டு பாக்கத் தெரியணும்.

பழகப் பழக அந்த கலைப் பார்வை வளர்ந்து கொண்டே வரும்.

சில நேரங்கள்ள, கண்ணுக்கு முன்னாடி, ரொம்ப அழகான காட்சி இருக்கும், ஆனா, அத க்ளிக்கி ப்ரிண்டு போட்டு பாத்தா, நீங்க அனுபவிச்ச அந்த அழகு படத்துல வந்திருக்காது.
பல நேரங்களில் இதற்கான காரணம், உங்க கண் உங்களுக்குக் காட்டும் காட்சியை, காமிரா லென்ஸ் அப்படியே முழுசாக தராததுதான்.

கண்ணு 180 டிக்ரி (ரைட்டா?) சுத்தளவுல எல்லாத்தையும் பாக்கும். அந்த சுத்தளவுல இருக்கரதெல்லாம் உங்க சாதா காமிரால அப்படியே ஒரு க்ளிக்குல பதிய முடியாது.

அதனால ஒரு மேட்டர பாக்கும்போது, அது அழகா இருந்தா, அதுல எது உங்க வெறும் கண்ணுக்கு அழகா தெரியுதோ, அந்த மேட்டர் காமிராவின் view-finderல வருதான்னு பாருங்க.

உதாரணத்துக்கு, ஒரு தென்னந்தோப்ப பாக்கும்போது, தென்னை மரங்கள் வளைவாக இருப்பதும், அதற்கு மேல் வானம் நீலமாக இருப்பதும், கீழே பச்சை கலர்ல புல்லும் இருக்குன்னு வச்சுக்கங்க. உங்க கண்ணுக்கு இது எல்லாமே தெரிவதால், காட்சில ஒரு பன்ச் இருக்கும், மனசுக்கும் புடிக்கும்.

இத க்ளிக்கும் போது, காமிராவின் பார்வையில் (உபயோகிக்கும் லென்ஸைப் பொறுத்து) மரம் பாதிதான் தெரியும், சில சமயம் வானம் தெரியாமலிருக்கும், புல்லும் தெரியாது. கண்ணில் பார்ப்பதை, காமிராவில் எடுக்கணும்னா, கொஞ்சம் தள்ளி பின்னாடி போய் ஒரு சுவர் மேல் ஏறி எடுக்க வேண்டி இருக்கலாம், இல்லன்னா தரையில மல்லாக்க படுத்து எடுத்தா கிட்டத்தட்ட நீங்க நெனைக்கரது வரும்.

சும்மா, நிந்த எடத்துல, க்ளிக்கினீங்கன்னா, நல்ல படம் வரவேண்டிய இடத்தில், சுமார் ரகம் தான் வரும்.

so, அட்வைஸ் என்னன்னா, நல்ல படம் எடுப்பதர்க்கு, கொஞ்சம் சிரமப் படணும் - Don't Compromise on what you can fit into the view finder.

எப்படி எடுத்தா நல்லா இருக்கும்னு நெனைக்கறீங்களோ, அப்படியெடுக்க கொஞ்சம் முயற்சி செஞ்சு எடுங்க. கீழப் படுத்தோ, அந்தரத்துல தொங்கியோ, நடு ரோட்டுல நின்னோ, தண்ணில நனஞ்சோ - எப்படியோ. Don't Compromise. நல்ல காட்சிகள் அடிக்கடி வராது. வரும்போது, அத விடக்கூடாது, சரியான angleல, க்ளிக்கித் தள்ளோணும்.

சரிதானபா?
சரி, இனி கீழே என் சமீபத்திய க்ளிக்குகளில் சில சாலைகள்.


1)


2)


3)


4)


5)


6)



எந்த ஊர்னு சொல்லுங்க பாக்கலாம். :)

டிப்பு வேணுமா? கொஞ்ச தூரத்துல ஒரு கடற்கரை ஓர பழைய கோட்டை இருக்கு. பம்பாய் பாட்டு ஒண்ணு இங்கதான் எடுத்தாங்க.

நன்றி!

-சர்வேசன்

Friday, November 9, 2007

எங்களால் நடத்தப்பட்ட புகைப்பட போட்டிகள் சம்பந்தப்பட்ட அனைத்து சுட்டிகளும் இங்கு காணலாம்














































































போட்டிக்கு வந்த படங்களின் விமர்சனங்கள் - சீவீஆர் மற்றும் இளவஞ்சி

ஜூலை மாத போட்டி
நடுவர்கள் (CVR மற்றும் சர்வேசன்)

அறிவிப்பு

முடிவுகள்

போட்டிக்கு வந்த படங்களின் விமர்சனங்கள் - சர்வேசன்
போட்டிக்கு வந்த படங்களின் விமர்சனங்கள் - செல்லா

ஆகஸ்ட் மாத போட்டிநடுவர்கள் (பாமரன் மற்றும் செல்லா)

அறிவிப்பு

முடிவுகள்

போட்டிக்கு வந்த படங்களின் விமர்சனங்கள் - செல்லா

செப்டெம்பர் மாத போட்டிநடுவர்கள் (ஜீவ்ஸ் மற்றும் AN&)

அறிவிப்பு

முடிவுகள்

போட்டிக்கு வந்த படங்களின் விமர்சனங்கள் - CVR

அக்டோபர் மாத போட்டிநடுவர்கள் (நாதன் மற்றும் யாத்திரீகன்)

அறிவிப்பு

முடிவுகள்

போட்டிக்கு வந்த படங்களின் விமர்சனங்கள் - யாத்திரீகன்
போட்டிக்கு வந்த படங்களின் விமர்சனங்கள் - செல்லா

நவம்பர் மாத போட்டி
(விழியன் மற்றும் பிரகாஷ்)

அறிவிப்பு

முடிவுகள்


டிசம்பர் மாத போட்டி
(தீபா மற்றும் செல்லா)

அறிவிப்பு

முடிவுகள்


ஜனவரி மாத போட்டி
(சர்வேசன் மற்றும் வற்றாயிருப்பு சுந்தர்)

அறிவிப்பு

முடிவுகள்

போட்டிக்கு வந்த படங்களின் விமர்சனங்கள் - சர்வேசன்

பிப்ரவரி மாத போட்டி
(இளவஞ்சி மற்றும் சீவீஆர்)

அறிவிப்பு

முடிவுகள்





Monday, November 5, 2007

நண்பர்கள் என்னிடம் தன் படங்களை காட்டும் போதும்,மற்றும் போட்டிக்கு வரும் படங்களை பார்க்கும் போதும்,எனக்கு தோன்றும் முதல் விஷயம்,இதில் சற்றே பிற்தயாரிப்பு(post production) செய்தால் படம் எவ்வளவு அழகாக வரும் என்பதுதான்!

என்னிடத்தில் யார் ஏதாவது படம் காட்டினாலும்,அதில் சிறிது அங்கே இங்கே அழகு படுத்த முயல்வது எனது நெடு நாளைய பழக்கம்.அப்படி செய்து விட்டு இதே போல் எல்லோரும் செய்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைக்காத நாள் இல்லை.
பிற்தயாரிப்பு பற்றி பல பதிவுகளை நாங்கள் இந்த வலைப்பூவில் போட்டிருந்தால் கூட வாசகர்களுக்கு இந்த பழக்கத்தை தொடக்கிவிட ஒரு சிறிய ஒளிப்பதிவு முயன்றிருக்கிறேன்.நான் வழக்கமாக செய்யும் சில அடிப்படை பிற்தாயாரிப்பு வேலகளை பதிவு செய்திருக்கிறேன்.

ஆங்காங்கே குரலில்/சத்தத்தில் தொய்வு தெரியலாம்,அதுவுமில்லாமல் காட்சிக்கு ஏற்ற வர்ணனை இல்லாமல் குரல் சற்றே தாமதமாக வரலாம். இவை இரண்டும் நான் கவனித்த சில குறைபாடுகள்.இவை தவிர ஏதாவது குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கவும்,அடுத்த முறை சரி செய்ய முயற்சிக்கிறேன்.

இது ஒரு அறிமுக பதிவு மட்டுமே,மென்பொருட்களை எப்படி பயன்படுத்துவதென்றோ,அதில் இருக்கும் பல்வேறு பயன்பாடுகள்,அவற்றை இயக்கும் விதம் எல்லாம் முழுமையாக இதில் காட்ட முயற்சிக்க வில்லை.ஆனால் பிற்தயாரிப்பினால் ஒரு படம் எந்த அளவுக்கு மாறுகிறது என்பதை உங்களுக்கு காட்டவும்,பிற்தயாரிப்பு செய்யும் பழக்கத்தை உங்களிடம் அறிமுகப்படுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.
பி.கு: படத்தை முழு திரைக்கு பெரிதாகி பார்த்தால் நல்லது!! :-)

நண்பர்கள் சொன்னதால் குரல் செம்மை படுத்தப்பட்டுள்ளது ! :-)




தொடர்புள்ள பதிவுகள்:
பிக்காசாவும் பிற்தயாரிப்பு நுணுக்கங்களும்
ரசம் + தர்பூசணி = மாடர்ன் ஆர்ட்!
புகைப்பட போட்டியில் பரிசு பெறுவது எப்படி??
உங்கள் போட்டிப் புகைப்படங்கள் -என் பார்வையில்!
புகைப்பட போட்டி முடிவுகள் - ஜூலை படம்

Thursday, November 1, 2007

வணக்கம் நண்பர்களே !!
மாதா மாதம் எமது போட்டிக்கு புகைப்படங்கள் அனுப்பி சிறப்பிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. அதுவும் போன தடவை வந்த படங்கள் பார்த்து எங்களுக்கு கிடைத்த உற்சாகம் உங்களுக்கும் வந்திருக்கும் என நினைக்கிறேன். ஒவ்வொரு படமும் பார்க்கும் போதும் அன்பர்கள் சிரத்தை எடுத்து படம் நன்றாக வரவேண்டும் என்று எடுத்த முயற்சிகள் கண்கூடாக தெரிந்தது.இதில் இந்த குழுப்பதிவு ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறப்பெறுவதை கண்டு எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

சரி சரி!!வள வள வென்று பேசாமல் அறிவிப்பிற்கு நேரடியாக சென்று விடுவோம்!
புகைப்படக்கலையின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் நம்மை சுற்றி இருக்கும் சாதாரண பொருட்கள், இடங்களில் கூட ஒளிந்திருக்கும் அழகை நாம் இரசிக்க கற்றுக்கொடுத்து விடும்.

தலைப்பு - சாலைகள்
நடுவர்கள் - விழியன் மற்றும் பிரகாஷ்
படங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.
(You just have to publish your pictures in your blog and give the link as comment for the post! :-).If you dont have a blog,links to photo publishing sites like flickr are Ok )
போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம்.எதுவும் சொல்லாத பட்சத்தில் இடுகையில் உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
காலம் - நவம்பர் 1 முதல் 15
நாட்டாமைகள் தீர்ப்பு சொல்லும் நாள் - 25 நவம்பர்

எப்பவும் போல சில உதாரண படங்கள் :-)







அப்புறம் உங்க இன்ஸ்பிரேஷனுக்கு ஃபிளிக்கருல என் கண்ணுல பட்ட சில சாலைகள் புகைப்படங்கள் இதோ! :-)

http://vizhiyan.wordpress.com/2007/11/04/vizhiyan-photography-18/
http://www.flickr.com/photos/womanwithacamera/1727655655/
http://flickr.com/photos/52562615@N00/1761153052/
http://www.flickr.com/photos/anandps/1626068965/

மறக்காமல் உங்கள் படங்களுக்கு பிற்தயாரிப்பு செய்து படங்களுக்கு மெருகேற்றுங்கள்
எப்பவும் போல கலக்குங்க!! :-)

போட்டிக்கான படங்கள்:

1.) இம்சை
2.) ஆயில்யன்
3.) தேவ்
4.) வி. ஜெ. சந்திரன்
5.) வல்லிசிம்ஹன்
6.) god - 1, 2
7.) சினேகிதி
8.அ) பிரபாகரன்(1)
8.ஆ) பிரபாகரன்(2)
9.) இ.கா.வள்ளி
10.) மணி
11.) வாசி
12.அ) லக்ஷ்மணராஜா(1)
12.ஆ) லக்ஷ்மணராஜா(2)
13.) நாதஸ்
14.) ராமசாமி மலையமான்
15.அ)இளா (1)(பதிவில் நான்காவது படம்)
15.ஆ)இளா (பதிவில் முதல் படம்)
16.) மோகன்தாஸ்
17.அ.) சிவசங்கரி(1)
17.ஆ.) சிவசங்கரி(2)
18.) ராமசந்திரனுஷா
19.) ஜவஹர்
20.) பூங்கி
21.அ) அப்பாஸ்(1)
21.ஆ) அப்பாஸ்(2)
22.அ.) தீபா(1)
22.ஆ.) தீபா(2) பதிவில் உள்ள மூன்றாவது படம்
23.அ.) சதங்கா(1)
23.ஆ.) சதங்கா(2)
24. Baby Pavan
25. நட்டு
26.வீர சுந்தர்
27.மீனா அருண்
28.Osai chella
29.லொடுக்கு
30.அனுசுயா
31.ஸ்ரீகாந்த்
32.முத்துலெட்சுமி
33.ஒப்பாரி
34.விஜய்
35.சூர்யா
36. J K
37. மு.கார்த்திகேயன்
38. நானானி
39. கைப்புள்ள படங்கள் 1 மற்றும் 9
40. உண்மை (Truth)
41. இராம் 6-ஆவது மற்றும் 7-ஆவது படம் போட்டிக்கு
42. பரமேஷ்
43. அரவிந்தன்
44. ஆதி
45. மணியன்
46. நாகை சிவா
47. சுகவாசி
48. வற்றாயிருப்பு சுந்தர்

இதற்கு மேல் போட்டிக்கு படங்கள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது!! பங்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff