Showing posts with label ஒளி பாடம். Show all posts
Showing posts with label ஒளி பாடம். Show all posts

Monday, May 28, 2012

எவ்வளவுக்கு எவ்வளோ காமிராகிட்ட விளக்கு இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு சமமா வெளிச்சம் விழும். உதாரணமா காமிராவோட பிளாஷ். ஆனா பிரச்சினையே அந்த மாதிரி விளக்கு கோணக்கொத்துக்குள்ளே வந்துடும் என்கிறதுதான். என்ன செய்யலாம்? எனக் கார முந்திரி 9-ல் கேட்டு நிறுத்தியிருந்தேன்.

இப்போ அதற்கு இன்னொரு வழியை பார்க்கலாம். விளக்கை கிட்ட கொண்டு வராம தூரத்தில வைக்கலாம். அப்ப அது கோணக்கொத்துக்குள்ளே வராது. வெளிச்சமும் கூடியவரை சமமா இருக்கும்!

விளக்கை எங்கே வைத்தா நேரடி பிரதிபலிப்பும் இல்லாமல், கூடிய வரை சமமான வெளிச்சம் பொருள் மேலே விழுமோ, எப்போது அது குறைந்த எக்ஸ்போசர் நேரத்தை கொடுக்கும் அளவு வெளிச்சம் அதிகமா இருக்குமோ- அதை சாதிக்கணும்!

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்! அப்பாடா!

இதுக்கு பென்சிலும் பேப்பரும் வெச்சுகிட்டு கணக்கு போடலாம். ஆனா ப்ராக்டிகலா அது தேவை இல்லைங்க! மனித கண்ணே போதுமானது. பிரச்சினைகள் என்னன்னு புரிஞ்சா தானா விடைகளை நாமளே கண்டு பிடிச்சுடுவோம். தேவையானால் பொருள் மேலே விழுகிற வெளிச்சத்தை லைட் மீட்டர் வெச்சு அளந்துக்கலாம். வேற ஒண்ணும் வேணாம்!

முடியாததை முயற்சி செய்ய...

இப்ப பார்த்த உதாரணங்களில் ஒரு விஷயம் புரிஞ்சிருக்கும். சமமான ஒளியூட்டலும் கிளேர் இல்லாத ஒளியூட்டலும் ஒண்ணுக்கொண்ணு முரணாக இருக்கலாம். காமிராவுக்கு அருகிலே விளக்கு இருந்தா அது வெளிச்சத்தை சீரா சமமா பொருள் மேலே பாய்ச்சும், ஆனா கோணக்கொத்திலே இருக்கும். பக்கவாட்டிலே இருந்தா சம வெளிச்சம் போயிடும், ஆனா கோணக்கொத்திலே இருந்து வெளியே இருக்கும்.

தீர்வு என்ன?

ஒண்ணு விளக்கை காமிரா கிட்டே கொண்டு போனா, காமிராவை தூரத்துக்கு கொண்டு போகணும். (அதே மாதிரி படம் வர நீளமான லென்சை பயன்படுத்தியோ ஜூம் செய்தோ எடுக்கணும்.) அப்ப கோணக்கொத்து சின்னதா இருக்கும். விளக்கை வைக்கிறதுல கொஞ்சம் சுதந்திரம் கிடைக்கும்.

அல்லது இட வசதி இல்லை, காமிரா கிட்டேதான் இருந்தாகனும்ன்னா, விளக்கை மிக சின்ன கோணத்தில வைக்கணும்; அப்ப கொஞ்சமாவது சீரான வெளிச்சம் பொருள் முழுதும் படணும்ன்னா விளக்கு பக்கவாட்டிலே தூரத்துக்கும் போகணும்.



படம் நன்றி: http://www.freenaturepictures.com/mountain-peak-pictures.php




எப்படி இருந்தாலும் இடம் வேணும் என்கிறதே பிரச்சினை. ஒரு ம்யுசியத்திலே சின்ன ரூமில எட்டுக்கு பத்து அடி அளவில சுவர் முழுதும் ஆக்கிரமிக்கற படத்தை எப்படித்தான் போட்டோ எடுக்கிறது? பின்னால் ஓரளவுதான் போகலாம். விளக்கை பக்கவாட்டிலேயும் கொண்டு போக முடியாது. படத்தை பாருங்க. முடியவே முடியாதுன்னு சொல்லிடலாம். இப்ப காட்டி இருக்கிற மாதிரி எடுத்தா நிச்சயம் கிளேர் இருக்கும். (உதாரண படத்துக்கு க்ளேர் கிம்ப்ல சேத்தது!)


ம்ம்ம்ம்ம்ம்... என்ன செய்யலாம். கொஞ்சம் லாஜிகலா யோசிக்கலாம்.

பிரச்சினை என்ன? கிளேர்.

அது எப்படி வருது? டிரக்ட் ரிப்லெக்ஷன்.

இதை தவிர்க்கிறது எப்படி? இது வரை பாத்த வழிகள் உதவா. ம்ம்ம் வேற வழி இருக்கு?

இருக்கு! போலரைஸ்ட் லைட் பத்தி பாத்தோமில்லையா? அங்கே விடை இருக்கு.

விளக்கு முகப்பில ஒரு போலரைசிங் பில்டர். காமிராவிலேயும் ஒரு போலரைசிங் பில்டர்.

விளக்கு முகப்பு பில்டரால வெளிச்சம் போலரைஸ்ட் ஆகிடும். அதனால் ரிப்லக்ஷனும் அப்படியே இருக்கும். காமிரா பில்டரை கொஞ்சம் சுழற்றி அட்ஜஸ்ட் செஞ்சா 90 டிகிரி வந்ததும் போலரைஸ்ட் வெளிச்சம் பில்டராகிடும். எந்த பொருளுமே நூறு சதவிகிதம் ஒரே மாதிரி வெளிச்சமா ரிப்லக்ட் பண்ணாதுன்னு பாத்தோமில்லையா? அதனால, என்ன டிப்யூஸ் வெளிச்சம் இருக்கோ அது மட்டும் காமிராவில பதிவாகும். இப்ப மத்ததை அட்ஜஸ்ட் பண்ணி படம் எடுத்துடலாம்!


எந்த பில்டரும் நூறு சதவிகிதம் வேலை செய்யாது. அதனால கொஞ்சம் கிளேர் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் ஒத்துக்கொள்ளக் கூடிய அளவிலே இருக்கும்.
இது ரொம்பவே ஸ்மார்ட் வழியா தோன்றினாலும் உண்மையில் வேற வழியே இல்லைன்னா இது என்கிற சமாசாரம்.

காரணம் பலது. நிறைய வெளிச்சம் பில்டர் ஆகிடும் என்கிறதால அபெர்சரை அதிகமாக்கணும். தியரில ரெண்டு ஸ்டாப் அதிகமாகும்ன்னாலும் செயலிலே 4-6 ஸ்டாப் அதிகமாகும். அப்படி செஞ்சா படத்தின் ஆழம் குறையும்.
இது காபி வேலைகளுக்கு பரவாயில்லை. ஆனா எக்ஸ்போசர் நேரம் அதிகமாகும் என்பதால நகரும் பொருட்களை இப்படி எடுக்க முடியாது. ஒளி மூலத்தை மிக அதிகமா வைத்து கொஞ்சம் சமாளிக்கலாம்.

இன்னொரு விஷயம் போலரைசிங் பில்டர் பத்தியது. பில்டர் ஆன ஒளி எங்கே போச்சு? அது சூடாக மாறிடும். சூடான பில்டர் சீக்கிரம் சேதமாகும். அதனால இந்த பில்டரை பயன்படுத்துகிறவங்க மத்த விளக்கை எல்லாம் அணைச்சுட்டுத்தான் இதை மாட்டுவாங்க. படமெடுக்க ரெடியாகிற வரை இதை செய்ய மாட்டாங்க.
கடைசியா, இந்த பில்டர் படத்தோட கலரை மாத்தவும் கொஞ்சம் வாய்ப்பிருக்கு.

-திவா(வாசுதேவன் திருமூர்த்தி)
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/




முந்தைய பதிவுகள்:
காரமுந்திரி I.
காரமுந்திரி II

Monday, April 9, 2012

பரப்புகளின் தோற்றம்:

எல்லா பரப்புகளுமே பரவலான, நேர், முனைவாக்கிய ..... என்னங்க? என்ன சமாசாரம்? புரியலையா? சரிதான். தமிழ்ல எழுதப்பாத்தேன். சரிப்படாதுன்னு தோணுது. சரி முன்ன மாதிரியே எழுதறேன்.

எல்லா பரப்புகளுமே டிப்யுஸ், டிரக்ட், போலரைஸ்ட் ரிப்லக்ஷன்களை கொடுக்கும். இவை எல்லாத்தையும்தான் பாக்கிறோம். ஆனால் அப்படி பாக்கிறோம் என்கிற அறிவு இல்லாமலே. ஆயிரக்கணக்கான வருஷங்களா நம் மூளை வளர்ச்சி அடைஞ்சதிலே பல விஷயங்களை நீக்கிவிட்டு பார்க்க கத்துக்கொண்டு இருக்கு. இதனால கவனத்தை திசை திருப்பக்கூடிய விஷயங்கள் அல்லது முக்கியமில்லை என்று நினைக்கிற விஷயங்கள் எல்லாம் பில்டர் ஆகிடும். அதே சமயம் நமக்கு முக்கியம்ன்னு நினைக்கிறதை இன்னும் அழுத்தமாகவே பதிவு செய்யும். கண்ணில விழுகிற பிம்பமும் நாம் மூளையால பார்க்கிற பிம்பமும் ஒண்ணு இல்லை.

உதாரணமா கடைத்தெருவுக்கு போறோம். கண்ணாடி ஷோ கேஸ்ல அழகழகா பல விஷயங்கள் இருக்கு. அதெல்லாம் பார்க்கிறோம். ஆமா, பாக்கிறோமா? தங்கமணி பாக்கிறாங்க. அவங்களுக்கு அதுல சுவாரசியம் இருக்கு. பக்கத்திலேயே இருக்கிற ரங்கமணி என்ன பார்க்கிறார்? அந்த கண்ணாடியில பிரதிபலிக்கிற காலேஜ் பொண்ணை பாக்கிறார். அவர் அப்படி பாக்கிறது தங்கமணிக்கு தெரியறதில்லை. சாதாரணமா இந்த பிரதிபலிப்பு உள்ளே இருக்கிற பொருட்களைவிட நல்லாவே தெரிஞ்சுகிட்டு இருக்கும்.

இந்தக் காட்சிக்காக அறிவிப்பான சவால்போட்டியில் வென்ற முத்துக்குமாரின் படம் இதை எத்தனை அழகாக விளக்குகிறது பாருங்க:

இது ஏன் எப்படின்னு யாருக்கும் தெரியலை. பொதுவா ஒரு நகர்படத்தில இந்த மாதிரி டிஸ்டர்பன்ஸ் எல்லாம் அவ்வளவா தொந்திரவு செய்யாது. ஆனா ஸ்டில் படத்தில் அப்படி இல்லை. ஏன்? தெரியாது!

ஒரு போட்டோவை எடிட் பண்ணுகிறதுக்கு மேலே மூளையால ஒரு சீனை எடிட் பண்ண முடியும். ஒரு போட்டோவை பாத்து ஆயிரம் குத்தம் குறை கண்டுபிடிக்கலாம். ஆனா அதே போட்டோ எடுத்த இடத்தை காட்டி சொல்லு பாக்கலாம்ன்னா முடியாது! இசைந்து வராத சமாசாரத்தை எல்லாம் மூளை வடிகட்டிடும்! விடுங்க, இது இன்னொரு புத்தகத்துக்கான சமாசாரம்!

படத்துக்கான லைட்டிங் ரெண்டு முனையில் இருக்கறதைதான் டீல் பண்ணுது. ஹைலைட்ஸ், நிழல்கள். இது ரெண்டும் சரியா அமைஞ்சா நடுவில இருக்கிறதெல்லாம் சரியாகவே இருக்கும். இந்த ரெண்டும்தான் ஒரு பொருள் எப்படி இருக்கு, அதோட வடிவம் என்ன, ஆழம் என்னன்னு எல்லாம் தெரிவிக்கும்.

ஆனா ஒரு பொருளோட பரப்பை தெரிஞ்சு கொள்ள ஹைலைட்ஸ் மட்டுமே போதும்.

முன் பதிவிலே மூன்று வித ரிப்லக்ஷன் பத்தி பார்த்தோம் இல்லையா? இந்த மூன்றும் சம விகிதத்தில இராது. ஒண்ணுத்துல டிப்யுஸ் பிரதிபலிப்பு அதிகமா இருக்கலாம். இன்னொண்ணுத்துல நேரடி பிரதி பலிப்பு அதிகமா இருக்கலாம். இப்படி இருக்கிற வித்தியாசத்தாலதான் ஒவ்வொரு பொருளும் வித்தியாசமா தெரியுது.

ஒரு பொருளை படமெடுக்க லைட்டிங் செய்ய நினைச்சா முதல்ல என்ன மாதிரி ரிப்லக்ஷன் அதை அதோட தன்மையை எடுத்துக்காட்டுதுன்னு யோசிக்கணும். இது முடிவான பின் லைட், பொருள், காமிரா – இதெல்லாத்தையும் எங்கே வெச்சா அந்த மாதிரி ரிப்லக்ஷன் நமக்கு கிடைக்கும்ன்னு யோசிக்கணும். அதே சமயம் அந்த மாதிரிதான் நாம் பார்கிறவங்களுக்கு எந்த மாதிரி ரிப்லக்ஷன் காட்டனும்ன்னும் யோசிக்கணும்.

டிஃப்யுஸ் பிரதிபலிப்பை பயன்படுத்துவது:

பழமை வாய்ந்த போட்டோக்கள், சித்திரங்கள் போன்றதை எல்லாம் போட்டோ எடுக்க வேண்டி இருக்கலாம். இது காப்பி வேலை என்கிறாங்க.

இப்ப பார்க்க போகிற உதாரணம் முதல் உதாரணம் என்கிறதால கொஞ்சம் விரிவா இருக்கலாம். யப்படா! இவ்வளோ சின்ன விஷயத்துக்கு இவ்வளோ யோசிக்கணுமா! வாண்டாம் சாமி ன்னு கூட தோணலாம். அதெல்லாம் சும்மா ஆரம்பத்தில தோணுவது. அடுத்த அடுத்த வேலை செய்யும் போது எல்லாம் ஆட்டோமேடிக்கா யோசிச்சு முடிச்சுடுவோம்!

ஒரு பிரிண்ட் பண்ண பேப்பர்; அதில நிறைய வெள்ளை இடம் இருக்கு. இது நிறைய டிப்யுஸ் வெளிச்சம் தரும். கொஞ்சம் கருப்பா இருக்கு. இது ரிப்லக்ஷனே தராது.
நாம் முன்னமே பாத்திருக்கோம். டிப்யுஸ் ரிப்லக்ஷன் ஒளி அதிர்வுகளை வித்தியாசமா திருப்பி விடும்ன்னு. அதாவது சில ஒளி அலைவரிசைகளை மட்டும் திருப்பிவிட்டு மத்ததை விழுங்கிடும். அதனால்தான் கலர் ன்னு ஒண்ணு தெரிகிறது. இந்த பக்கத்தையே ரா.ல. மஞ்ஞ்ஞ்ஞ்ச பேக்ரௌன்ட் பழுப்பு பான்ட் ல போட்டு இருந்தாங்கன்னா அதுவும் நமக்கு தெரியும். ரிப்ஃலக்ஷன் அதை சொல்லிடும்.

ஆனா என்ன மாதிரி பரப்புல இது இருக்குன்னு சரியா சொல்லாது. அது பேப்பரா இருக்கலாம், வழவழ தோலா இருக்கலாம், பளபள பிளாஸ்டிக்கா இருக்கலாம். டிப்யுஸ் ரிப்லக்ஷன் மட்டும் இருக்கிறப்ப வித்தியாசம் தெரியாது. அதுக்கு டிரக்ட் ரிப்லக்ஷன் வேணும்.
ஆனா காபி வேலைக்கு நமக்கு பரப்பு எப்படி இருக்குன்னு தெரிய வேணாம். மத்தபடி கலர் டீடெய்ல் தான் வேணும்.

ஒளியின் கோணம்:

ஆக காபி வேலைக்கு என்ன மாதிரி வெளிச்சம் வேணும்?

வழக்கமா காபி வேலை செய்கிற அமைப்பை பார்க்கலாம்.காமிரா ஒரு ஸ்டான்ட் ல இருக்கு. கீழே படம் இருக்கு. காமிராவை வ்யு பைண்டர்ல முழுசா படம் தெரிகிற மாதிரி செட் பண்ணியாச்சு. இப்ப காமிராலேந்து கோணக்கொத்து வரைஞ்சு பார்க்கலாம். இதுக்குள்ள லைட் வரக்கூடாது. அப்படி இருந்தா நேரடி ரிப்லக்ஷன் வந்து படத்தை கெடுத்துடும். படத்திலே அந்த லைட்டே தெரியும். அதனால லைட்டை இதுக்கு வெளியே வைக்கணும். ஒண்ணோ ரெண்டோ அது உங்க வசதி.


இது ஸ்டுடியோ வுக்கு பொருந்தி வரும். மியூசியம்ன்னா என்ன செய்யறது? நிறைய போட்டோக்ராபர்கள் புலம்பறது என்னன்னா 'படம் சுவத்தில இருக்கும். நாம காமிரா வைக்க வேண்டிய இடத்துல கரெக்டா ஒரு கண்ணாடி பெட்டியோ கல்தூணோ இருக்கும்!' என்கிறது! என்ன செய்யிறது? கிட்ட வெச்சு வைட் ஆங்கிள் லென்ஸ் பயன்படுத்த வேண்டியதுதான். ஓரங்களில டிஸ்டார்ஷன் வந்தா... ஏத்துக்க வேண்டியதுதான். அப்படின்னு பாத்தா இன்னொரு பிரச்சினை வந்துடுத்து. கோணக்கொத்து இன்னும் பெரிசா போச்சு! விளக்கை இன்னும் பக்கவாட்டிலே வைக்க வேண்டியதா போச்சு!

அதாவது காமிரா தூரத்தில இருக்கிறப்ப சரியா இருந்த விளக்கின் இடம் காமிரா கிட்டே வந்தா சரியில்லாம போயிடும். அறை கீக்கிடமா போய்விட்ட இடங்களிலே இங்கதான் விளக்கை வைக்க முடியும்ன்னு ஆயிடும்.

அப்படி ஆச்சுன்னா கோணக்கொத்தை சின்னதாக்க காமிராவை பின்னுக்கு கொண்டு போய் வேற லென்ஸ் பயன்படுத்தியோ ஜூம் பண்ணியோதான் படமெடுக்கணும்.

துரத்தில காமிரா இருக்கும்போது சரியா இருந்த விளக்கோட இடம் காமிரா கிட்ட வந்ததும் பிரச்சினை ஆயிடுத்து. நீல வரிகள் காமிரா கிட்டே வந்த பிறகு நிலையை காட்டுது. கோணக்கொத்து மாறிபோனதால இப்ப விளக்கு வைக்கக்கூடாத இடத்தில் இருக்கு.

சரி அடுத்ததை பார்க்கலாம். கீழே காண்பது வழக்கமான காபி செட் அப். (விளக்குகள் சிவப்பு கலர் வட்டம்)

விளக்குகள் 45 டிகிரி கோணத்துல இருக்கு. (படம் சரியா போட முடியலை.) இதுல விசேஷம் ஒண்ணுமில்லை. வழக்கமா இது சரியா வேலை செய்யுது.

இதுல கோணக்கொத்தை வரைஞ்சு பார்க்கலாம். விளக்குகள் அதுக்கு வெளியே இருக்கு.


இதுவே விளக்குகள் கிட்டே வந்தா? பொருளுக்கு அதே கோணத்தில இருந்தாலும் கிட்டே வரும்போது கோணக்கொத்துக்குள்ளே வர வாய்ப்பு இருக்கு. அப்படி ஆகக்கூடாதுன்னு தெரியுமே?


இதுக்காக பக்கவாட்டிலே லைட்டை ரொம்பவும் கொண்டு போயிட்டா பொருள் மீது விழுகிற வெளிச்சம் சமமா இராது. தூரம் அதிகமாயிடும் இல்லையா? இதை சரி செய்யத்தான் இரண்டாவது விளக்கு இன்னொரு பக்கம் அதே மாதிரி வைக்கிறாங்க!

ஆனா இந்த குணம் இன்னும் இன்னும் சாய்வா போக ரெண்டாவது விளக்காலேயும் இதை சரி செய்ய முடியாது. எவ்வளவுக்கு எவ்வளோ காமிராகிட்ட விளக்கு இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு சமமா வெளிச்சம் விழும். உதாரணமா காமிராவோட பிளாஷ்.

ஆனா பிரச்சினையே அந்த மாதிரி விளக்கு கோணக்கொத்துக்குள்ளே வந்துடும் என்கிறதுதான். என்ன செய்யலாம்? அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
***

-திவா(வாசுதேவன் திருமூர்த்தி)
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/


முந்தைய பதிவுகள்:
காரமுந்திரி I.
காரமுந்திரி II

Wednesday, February 29, 2012

அண்மைக் காட்சி (Close-Up) படம் பிடிக்கிறதுல நீங்க எவ்வளவு திறமைசாலிகள் எங்கிறத சொல்லுறதுக்கு போட்டிக்குக்கு வந்திருந்த படங்களே சாட்சி. ஆனாலும் உங்களுக்கு சவால் போட்டி காத்துக்கிட்டிருக்கு... அதோட முடிவுத் திகதியும் நெருங்கிக்கிட்டிருக்கு... எங்கிறத ஞாபகப்படுத்தத்தான் இந்தப்பதிவு.

கண்ணாடிக்கு உள் இருக்கும் காட்சி மற்றும் பிரதிபலிப்புக் காட்சி ஆகிய இரண்டு காட்சிகள் ஓரே படத்துல வரவேணும். இதுதான் விசயம். ( இதை 2-in-1 -ன்னும் சொல்லலாம்தானே?)

முந்தைய பதிவுல காணப்படும் படத்துல அமெரிக்க சனாதிபதியையும் (உள் இருக்கும் காட்சி) வெளியில இருக்கிற மரங்களையும் (பிரதிபலிப்புக் காட்சி) அழகாக படம் பிடித்த புகைப்படக்காரர பராட்டித்தான் ஆகனும். உட் காட்சி, பிரதிபலிப்புக் காட்சி ஆகிய இரண்டையும் சரியான ஒளியைக் கொண்டு படம் புடிச்சிட்டிங்கன்னா நீங்களும் பாராட்டுக்குரியவரே!

சவால் என்பதால் ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் அனுப்பிடலாம் எனும் அறிவிப்பில் உற்சாகமாகி பல நண்பர்கள் பல விதமாக முயன்று படங்களை அனுப்பிக் கொண்டிருப்பதும் பாராட்டுக்குரியது. இதுவரை வந்திருக்கும் படங்களை கண்ணாடிப் பேழை-சவால் போட்டி ஆல்பத்தில் பார்க்கலாம்.

ஒருசிலருக்கு இந்த சவாலைப் பற்றிய புரிதலில் சிரமம் இருப்பது தெரிய வருவதால் மாதிரிக்கு..

பார்முலா: சரியான ஒளி + உட் காட்சி + பிரதிபலிப்புக் காட்சி


முடிவு தேதி: 5 மார்ச் 2012

Friday, February 10, 2012

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறோம். இது வழக்கமான மாதாந்திரப் போட்டி அல்ல. ஒரு காட்சியை விளக்கக் கோரும் சவால் போட்டி.

ஒளி குறித்த தகவல்களைத் தொடர் கட்டுரையாக வழங்கி வரும் திவாஜி அடுத்து வரவிருக்கும் காரமுந்திரி-பாகம் 9-ல் சொல்கிறார்:

“உதாரணமா கடைத்தெருவுக்கு போறோம். கண்ணாடி ஷோ கேஸ்ல அழகழகா பல விஷயங்கள் இருக்கு. அதெல்லாம் பார்க்கிறோம். ஆமா, பாக்கிறோமா? தங்கமணி பாக்கிறாங்க. அவங்களுக்கு அதுல சுவாரசியம் இருக்கு. பக்கத்திலேயே இருக்கிற ரங்கமணி என்ன பார்க்கிறார்? அந்த கண்ணாடியில பிரதிபலிக்கிற காலேஜ் பொண்ணை பாக்கிறார். அவர் அப்படி பாக்கிறது தங்கமணிக்கு தெரியறதில்லை. சாதாரணமா இந்த பிரதிபலிப்பு உள்ளே இருக்கிற பொருட்களைவிட நல்லாவே தெரிஞ்சுகிட்டு இருக்கும். அது ஒரு போட்டோவா இந்த காட்சியை பிடிச்சாத்தான் தெரியும்.”

கட்டுரையில் இக் காட்சியை விளக்க உதாரணப் படம் தேவைப்படுகிறது. அதை வழங்கப் போவது நீங்களே. “பிட் குடும்பத்தில் திறமைசாலிகள் பலர் இருக்கையில் எதற்கு இணையத்திலிருந்து மாதிரிப்படம் எடுக்க வேண்டும்? இதை ஒரு போட்டியாக அறிவிக்கலாமே” என்றார் திவாஜி.

அவர் சொல்வதும் சரிதானே? கேமராவுடன் கிளம்புங்கள் கடைவீதிக்கு அல்லது கடைவீதிக்குச் செல்லும் போதெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் கேமராவை:)!

ரங்கமணி தங்கமணிதான் படத்தில் இடம்பெற வேண்டுமென்பதில்லை. காட்சி அமைப்பை உள்வாங்கி எந்தக் கதாபாத்திரங்களை வைத்து வேண்டுமானாலும், எந்த சூழலைப் பின்னணியாகக் கொண்டும் எடுக்கலாம். ஏனெனில் காலேஜ் பொண்ணை மாடல் செய்யக் கேட்டு தர்ம அடி வாங்கத் தான் தயாராக இல்லை என அங்கலாய்த்தார் பிட் குழும உறுப்பினர்களில் ஒருவர்:)!

காட்சியை உள்வாங்க சில உதாரணப் படங்கள்:
மாதிரிக்காக தந்திருக்கிறோம் என்றாலும் வெளிக்காட்சியின் பிரதிபலிப்பு இப்படத்தில் அதிக அளவில் இல்லை.

கண்ணாடிக்கு உள் இருக்கும் காட்சி, பிரதிபலிப்பு இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டவையாக போட்டிப் படங்கள் இருக்க வேண்டும். சரியான உதாரணம் கீழ் வருவது: கற்பனைக்கு ஏது எல்லை? மூக்குக் கண்ணாடியில் கூட சிக்கலாம் போட்டிக்கான காட்சி:)!

சிறந்த படம் கட்டுரையில் இடம் பெறும். அதை எடுத்த அனுபவத்தை முதல் பரிசு பெற்றவர் விருப்பமானால் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அப்பகிர்வு தனிப்பதிவாக PiT தளத்தில் வெளியிடப்பட்டுக் கெளரவிக்கப்படும். இரண்டாம், மூன்றாம் இடங்களுக்குத் தேர்வாகின்ற படங்கள் இன்னொரு பதிவாக வெளியாகும்.

படங்களை photos.in.tamil@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி விட்டு இப்பதிவின் பின்னூட்டத்திலும் தெரிவித்திடுங்கள்.நடுவராக திவாஜி செயலாற்றுவார்.

முடிவு தேதி 5 மார்ச் 2012.
***

படம் 1, நன்றி National Geographic Photography Contest Winners 2011 from http://www.boston.com/

படம் 2, நன்றி Wikipedia: Window reflection of Barack Obama in the Oval Office.jpg


இதுவரையிலும் போட்டிக்கு வந்த படங்கள்:
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff