Showing posts with label கருவாயன். Show all posts
Showing posts with label கருவாயன். Show all posts

Monday, July 25, 2011

வணக்கம் நண்பர்களே....

நீண்ட இடைவெளிக்கு பிறகு `புகைப்படங்களில் நேர்த்தி` என்கிற புதிய தலைப்பின் வழியாக உங்களை சந்திப்பதில், பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்...

இன்றைக்கு கிட்டதட்ட அனைவரிடத்திலும் ஏதோ ஒரு வடிவில் கேமரா என்பது நம்மிடம் இருப்பது உறுதி..

ஒரு சிலர் , முதன் முதலில் வாங்குகின்றோம் , நல்லதாக வாங்கிவிடலாம் என்று தனக்கு சம்பந்தமில்லாத , தேவையில்லாத விலை அதிகமான கேமராக்களை ஆர்வத்தில் வாங்கிவிடுவார்கள்..ஆனால் அவர்களுக்கு நன்றாக படம் எடுக்க தெரியாது...

சரி நமக்கு அவ்வளவு தான் தெரியும் என்று படம் எடுக்க விருப்பப்படமாட்டார்கள்.. அவ்வளவு தான், கேமரா சும்மா வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும்..

அதே சமயம் விலை குறைவான கேமராக்களை வைத்திருப்பவர்கள், தான் தவறாக எடுத்த படங்களை பார்த்து, இந்த கேமராவில் இவ்வளவு தான் எடுக்க முடியும் என்று தாழ்வு மனப்பான்மையுடன் மேலும் படம் எடுக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள்...

ஆனால் நல்ல படம் என்பது கண்டிப்பாக விலை அதிகமான கேமராவை வாங்குவதில் மட்டும் இல்லை என்பதை கீழே உள்ள படங்களை பார்த்தால் புரியும்..

இந்த படங்கள் 9000 ரூபாய் சிறிய கேமராவில் தான் எடுத்தது...





எனவே நல்ல படம் என்பது கேமராவில் மட்டுமல்ல ,எடுப்பவரின் கையிலும் உள்ளது..

2 லட்ச ரூபாய் கேமராவில் கொஞ்சம் தவறாக எடுக்கும் படத்தை விட 2 ஆயிரம் ரூபாய் கேமராவில் சரியாக எடுக்கப்படும் படம் சிறந்ததாக தான் இருக்கும்.. இதற்கு உதாரணங்கள் கீழே உள்ள படங்கள்.


இந்த படம் -1 40000 ரூபாய் கேமரா மற்றும் 40000 ரூபாய் லென்ஸில் எடுக்கப்பட்டது... இந்த படம் சற்று blur ஆக எடுக்கபட்டுள்ளதை இந்த சிறுவனின் முகத்தில் தெரியும்.. படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்..

(படம்-1)


ஆனால் அதே சிறுவன்,அதே இடத்தில், அதே நேரத்தில் 9000 ரூபாய் சிறிய கேமராவில் சரியாக(என்னால் முடிந்த அளவு) எடுக்கப்பட்டுள்ளதை இந்த படத்தை(படம்-2) பார்த்தால் புரியும்


(படம்-2)



ஒரு சில நேரங்களில் சின்ன sensor கேமராக்கள் தரும் சில சிறப்பம்சங்கள் (அதிக depth of field, macro close focusing etc.) பெரிய கேமராவில் கிடைக்காது என்பதை கீழே உள்ள படங்களை பார்த்தால் புரியும்...


இந்த படம் (படம்-3) 9000 ரூபாய் சிறிய கேமராவில் எடுத்தது.. இந்த தும்பியின் உடல் முழுவதும் டீடெய்ல்ஸ் இருக்கும்... இதன் காரணம் சிறிய கேமராவில் இருக்கும் அதிக depth of field ஆகும்.. இதை பற்றி பின் வரும் தொடர்களில் பார்க்கலாம்..

(படம் - 3 )



இந்த (படம் -4) 40,000 ரூபாய் கேமரா மற்றும் 40,000 ரூபாய் லென்ஸில் எடுக்கப்பட்டது... இவ்வளவு விலை இருந்தாலும் தும்பி பூச்சியின் தலையில் மட்டும் தான் டீடெயில்ஸ் இருக்கின்றது...


(படம் - 4)



அதற்காக பெரிய கேமராக்கள் தேவையில்லை என்று அர்த்தமில்லை.. நாம் நன்றாக எடுத்தால் சிறிய கேமராக்களும் நன்றாக படம் எடுக்கும்...

புதிதாக கேமரா வாங்குபவர்கள் கேமராவில் மலை போல் இருக்கும் settings ஐ பார்த்து பயந்து போய் இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என்று சிம்பிளாக auto mode ல் போட்டு படமெத்துக்கொண்டு திருப்திப்பட்டுக்கொள்வார்கள்..

ஒரு சிலர் பெரிய zoom கேமரா/ லென்ஸ் வைத்துக்கொண்டு zoom பட்டனைக்கூட சரியாக பயன்படுத்தாமல் wide angleலேயே படமெடுப்பார்கள்.. இதனால் அந்த மாதிரி கேமராக்களை வாங்குதில் அர்த்தமில்லாமல் போய் விடுகின்றது..

இந்த மாதிரி எல்லாம் தவறுதலாக படம் எடுக்கும் போது நாம் புதுமையாக படம் எடுக்கவோ, கற்றுக்கொள்ளவோ வழியில்லை என்று சொல்லலாம்..

இப்படி பல குறைகள் தீர இத்தொடர் உதவும் என்று நம்புகின்றேன்..

ஒரு நல்ல படம் அமைய வேண்டுமென்றால், முக்கியமாக கவனிக்கவேண்டியது என்று மூன்று விதமாக பிரித்துக்கொள்ளலாம்..

1. படம் எடுப்பதற்கு முன்

கேமராவை எப்படி செட்டிங்ஸ் செய்வது , அதாவது exposure , ISO , white balance , aperture , shutter speed zoom எப்படி பயன்படுத்துவது,கேமராவை எப்படி கையாள்வது என்பதை பற்றி பார்க்கலாம்..


2. படம் எடுக்கும் போது

சரியாக ஃபோகஸ் செய்வது எப்படி , back ground எப்படி , focal length பயன்படுத்துவது , blur இல்லாமல் எடுப்பது, கம்போஸிசன் போன்றவற்றை பற்றி பார்க்கலாம்..


3. படம் எடுத்த பின்

இன்றைய டிஜிட்டல் கேமரா உலகில் படம் எடுக்கும் போது எவ்வளவு முக்கியமாக கவனிக்க வேண்டுமோ ,அதே அளவுக்கு post processing(குறைந்தபட்சம்) என்பதும் முக்கியமே..

இதில் முக்கியமான எளிதான cropping , contrast , sharpening ஆகியவற்றின் முக்கியதுவம் பற்றியது..


முதலில், படம் எடுப்பதற்கு முன் கவனிக்கவேண்டியதை அடுத்து பகுதியில் இருந்து பார்ப்போம்...

-கருவாயன்

Sunday, March 13, 2011


அன்பு நண்பர்களே...

இதற்கு முன்னர் பகுதிகளில் interchangable lens கேமராக்களில் DSLR , MIRRORLESS CAMERA ஆகியவற்றை பற்றி பார்த்தோம்..


1. DSLR கேமராக்கள் ஏன் பெரிதாக இருக்கின்றன .

2. DSLR சென்சாரின் பல வகைகள்..

3. DSLR நன்மைகள் , குறைகள்

4. MIRROR LESS கேமராக்கள்..

5. MIRROR LESS கேமராக்களின் நன்மைகள் , குறைகள்..


இப்பகுதியில் மற்றொரு புதிய வரவான interchangable lens கேமராவை பற்றி பார்ப்போம்...


SLT கேமரா





SLT என்றால் single lens translucent கேமரா...

இது கிட்டதட்ட DSLR மாதிரியான கேமரா தான்.. ஆனால் DSLR ஐ விட சின்ன சைஸ்..

ஆனால் SLR (single lens reflex) கிடையாது.. இது ஒரு EVF (Electronic View Finder) கேமரா..

இவ்வகை SLT கேமராக்கள் என்பது பாதி DSLR ம் , பாதி mirror less ம் கலந்தது என்று கூறலாம்..

இது கிட்டதட்ட mirror less கேமராக்களுக்கும் ,DSLR கேமராக்களுக்கும் நடுவிலான ஒரு கேமரா என்றும் சொல்லலாம்...








நாம் ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்தோம்,பொதுவாக ஒரு mirror less கேமராவில், DSLRல் இருப்பது போல் இரண்டு விசயங்கள் கிடையாது..

ஒன்று pentaprism.. இதை பயன்படுத்தி லென்ஸ் வழியாக வரும் ஒளியினை நாம் அப்படியே கண்ணாடியில் பார்ப்பது போல் optical view finder பார்ப்பதற்காக அமைக்கப்படும் ஒரு வகை mirror ஆகும்..


மற்றொன்று auto focus சென்சார், இது லென்ஸ் வழியாக வரும் ஒளியினை அப்படியே (opticalஆக) ஒரு பகுதியை autofocus ற்கு என்று தனியாக உள்ள auto focus சென்சாரை பயன்படுத்துவார்கள்.. இதை தான் phase detection auto focus என்று கூறுவார்கள்..


கேமராவின் அளவு,எடை ஆகியவற்றை குறைப்பதற்காக,மேலே சொன்ன இரண்டு விசயங்கள் இல்லாததால், mirror less கேமராக்களில் இரண்டு முக்கிய விசயங்கள் பயன்படுத்த முடியாது.. அது என்னவென்றால்,


1. optical view finder. இதற்கு பதிலாக தான் mirror less கேமராக்களில் , live view பயன்படுத்தியோ அல்லது electronic view finderஐ பயன்படுத்தியோ தான் படம் எடுக்க முடியும்.. இது முழுக்க முழுக்க electronics ஆகும்..


2. phase detection auto focus. இதற்கு பதிலாக contrast detect auto focus என்கின்ற முறையை பயன்படுத்தி தான் படம் எடுக்க முடியும்..இதுவும் முழுக்க electronics சமாச்சாரம் தான்..


இந்த contrast detect auto focus முறை என்பது, ஒளியானது சென்சாருக்கு வந்த பிறகு, சிறு processing ஆன பிறகு தான் auto focus ஆகும். இது முழுக்க முழுக்க electronics ஆகும்..


இதனால் DSLRன் phase detection auto focus உடன் ஒப்பிடும் போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு mirror less கேமராவில் பயன்படுத்தப்படும் auto focus வேகம் கண்டிப்பாக குறைவான வேகத்தில் தான் இருக்கும்..

இதனால் ஒரு சில வாடிக்கையாளர்கள், சிறிய சைஸ் கேமராக்களில், குறிப்பாக mirror less கேமராக்களில் வேகமாக autofocus ஐ பயன்படுத்த முடியாது.

சரி,இதற்கு என்ன வழி?? mirro box வைத்தால் அளவும், எடையும் கண்டிப்பாக கூடி விடும்.. அதற்கு DSLR ஐயே வாங்கிக்கொண்டு போகலாமே??

கேமராவும் DSLRஐ விட சிறியதாக இருக்க வேண்டும் அதே சமயம் autofocus ம் நன்றாக இருக்க வேண்டும்..

இதற்கு ஒரு சிறு வழி கண்டுபிடித்தார்கள்.. அது என்னவென்றால், இவ்வகை SLT கேமராக்கள்..

சரி, இதன் சிறப்பு என்ன ?

இதில் சிறப்பு என்னவென்றால்,

mirror less கேமராக்களை போல் இவ்வகை SLT கேமராக்களில் mirror box மற்றும் pentaprisam கிடையாது..

DSLR ல் optical view finder மற்றும் phase detection autofocus ற்காக mirror box ஐ பயன்படுத்துவார்கள்...

ஆனால் அதற்கு பதிலாக , SLT கேமராக்களில் beam splitter என்கிற ஒரு வகை ஒளி பிளப்பான் mirror ஐ மட்டும் பயன்படுத்துகின்றனர்..

இது என்ன செய்யும் என்றால், லென்ஸ் வழியாக வரும் ஒளியின் பெரும்பாலான பகுதியை நேரடியாக படம் பிடிக்கும் சென்சாருக்கு அனுப்பும், மீதி ஒளியை beam splitter உதவியுடன் refelect செய்து phase detection auto focus சென்சாருக்கு பிரித்து அனுப்பும்..

இப்படத்தை பார்த்தால் புரியும்..




இதனால் என்ன நன்மை என்றால்.... கேமராவும் சிறியதாக இருக்கும் அதே சமயம் auto focus ம் DSLR ல் இருப்பது போல் phase detection முறையில் பயன்படுத்தப்படும்..

இதனால் DSLR மாதிரியே வேகமாக auto focus செய்யமுடியும்.. இதனால் ஒரு சில action படங்களையும் எளிதாக auto focus செய்யும் வசதி சிறிய கேமராக்களிலேயே கிடைக்கின்றது..

தகவல்கள்:

  • தற்போதைக்கு sony கம்பெனி மட்டும் SLT கேமராக்களை தாயரித்து வருகின்றன.. sony a55 , sony a33
  • இதுவும் கிட்டதட்ட 75% DSLR மாதிரி தான் அளவில்,அமைப்பில் இருக்கின்றது..



  • இதன் சென்சாரும் DSLR ல் பயன்படுத்த படும் APS-C சென்சார் வகைகள் தான்..
  • இதன் வீடியோ என்பது மற்ற டிஜிட்டல் கேமராக்களை விட கண்டிப்பாக வேகமாகவும் நல்ல குவாலிட்டியுடனும் இருக்கும்
  • mirror இல்லாததால் இதில் ஒரு விநாடியில் அதிகபட்சம் 10 ஃப்ரேம் வரை படம் எடுக்கலாம்..
  • electronic view finder தான் வழி.. DSLRல் இருப்பது போல் optical view finder வராது..
  • DSLR ல் இருப்பது போல் phase detection auto focusல் படம் எடுக்கலாம்.. DSLR ல் கூட live view ல் phase detection auto focus எடுக்க முடியாது... ஆனால் இவ்வகை SLT கேமராவில் மட்டும் live view ல் கூட வேகமாக phase detection auto focus செய்யலாம்.
  • ஒரு கேமராவுக்குள் நிறைய features , நல்ல தெளிவான EVF , நல்ல வீடியோ,GPS , கொஞ்சம் புது டிஸைன் , இந்த மாதிரி புதுமை விரும்பிகள் வேண்டுமானால் இவ்வகை கேமராக்களை வாங்கலாம்..
  • சைஸ் பிரச்சனையில்லையென்றால் , நல்ல படம் எடுத்தால் போதும் என்று விரும்புகின்றவர்கள் இவ்வகை கேமராக்கள் வாங்கத் தேவையில்லை.. DSLR ஐயே வாங்கலாம்..


DSLR , MIRRORLESS , SLT கேமராக்களின் முக்கிய அம்சங்கள்:

DSLR:

1. mirror box மற்றும் pentaprism உண்டு. இதனால் எடை ,அளவு பெரிது.
2.optical view finder உண்டு.. EVF தேவையில்லை.
3.phase detection auto focus ஆகும்.
4.ஆனால் live view வில் contrast detect auto focus தான் வழி..
5.auto focus ற்கு என்று தனியாக சென்சார் உண்டு..


mirror less கேமராக்கள் :

1. mirror box மற்றும் pentaprism எதுவும் கிடையாது. நேராக சென்சாருக்குள் ஒளி..
2.optical view finder கிடையாது. live view அல்லது EVF தான் படம் எடுப்பதற்கு வழி.
3. contrast detect auto focus மட்டும் தான் வழி.. phase detection auto focus கிடையாது.
4.auto focus ற்கு என்று தனியாக சென்சார் கிடையாது..


SLT கேமராக்கள்:

1.mirror box, pentaprism இரண்டும் கிடையாது..
2.அதற்கு பதிலாக beam splitter பயன் படுத்துகின்றனர்.
3.optical view finder வழியில்லை.. EVF தான் வழி.
4.phase detection auto focus ஐ live view வில் கூட பயன்படுத்தலாம்..
5.auto focus ற்கு என்று தனியாக சென்சார் உண்டு.




மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்...

நன்றி
கருவாயன்

Sunday, March 6, 2011


அன்பு நண்பர்களே.

இதற்கு முன்னர் பகுதிகளில்,


1. DSLR கேமராக்கள் ஏன் பெரிதாக இருக்கின்றன .

2. DSLR சென்சாரின் பல வகைகள்..

3. DSLR நன்மைகள் , குறைகள்

4. MIRROR LESS கேமராக்கள்..

ஆகியவற்றை பற்றி பார்த்தோம்..

இந்த பகுதியில் mirror less கேமராக்களின் நன்மைகள் , குறைகளை பற்றி பார்ப்போம்..


நன்மைகள்:
DSLR உடன் ஒப்பிடும் போது:

  • கேமரா body ன் அளவுகளும் , லென்ஸின் அளவுகளும் குறிப்பிடும்படியான அளவுக்கு சிறியது.. எடையும் கம்மி.
  • சிறிய சைஸ் கேமராவிற்குள்ளேயே, DSLR ல் பயன்படுத்தப்படும் ஒரே அளவிலான சென்சார்கள்.
  • flange focal distance குறைவாக இருப்பதால் wide angle லென்ஸ்களை மிக சிறியதாகவும்,விலை குறைவாகவும் தயாரிப்பது மிக எளிதாகின்றது..
  • வெறும் adopterஐ மட்டும் பயன்படுத்தி எந்த வகை ப்ராண்ட் லென்ஸ்களையும் பயன்படுத்தி படமெடுக்கலாம்.. ஆனால் இவ்வகையில் manual focus மட்டுமே வழி..
  • இதில் mirror இல்லாததால் DSLR ல் shutter release செய்யும் போது ஏற்படும் சத்தம் மற்றும் அதிர்வுகள் இந்த கேமராக்களில் இல்லை.. இதனால் ஒரு சில மேக்ரோ படம் எடுப்பதற்கு பயன்படும்..
  • live view ல் படமெடுக்கும் போது DSLR ஐ விட mirror less கேமராவில் நல்ல வேகம் மற்றும் smooth ஆக இருக்கும்..
  • வீடியோ எடுக்கும் போதும் auto focus தொடர்ச்சியாக ஆகும் நன்மை உண்டு.. இதனால் வீடியோ மிகவும் சிறப்பாக இருக்கும்..இது DSLR வீடியோவை விட நல்ல வேகம்.

நன்மைகள்: சிறிய கேமராக்களுடன் ஒப்பிடும் போது:


  • சிறிய கேமராக்களை விட வேகமான focus
  • குறைவான shutter lag ..
  • சென்சார் சிறிய கேமராக்களை விட பல மடங்கு பெரியதாகும்.. இதனால் கண்டிப்பாக IMAGE QUALITY நன்றாக இருக்கும்.. அதிக பிக்ஸல்களும் பயன்படுத்தலாம்..
  • ஒரு சில கேமராக்களில் EVF (electronic view finder) உண்டு.. அருமையான EVF.. நல்ல தெளிவாக இருக்கும்.. ப்ரொஸ்யூமர் கேமராக்களில் வெளிச்சம் அதிகமாக இருக்கும் போது ஏற்படும் சிரமம் இதில் இருக்காது..
  • NOISE கம்மி... இதனால் ISO 800 வரையில் தைரியமாக பயன்படுத்தலாம்...
  • க்ரிப் நன்றாக இருக்கும்.. ஆடாமல் டைட்டாக பிடித்து படம் எடுக்கலாம்.

குறைகள்: DSLR உடன் ஒப்பிடும் போது:

  • லென்ஸ் சாய்ஸ் என்பது சற்று குறைவு தான்..ஒரு குறிப்பிட்ட லென்ஸ் வகைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன..ஆனால் ஒரு சில sports மற்றும் SPECIAL வேக லென்ஸ்களை தவிர நார்மல் படம் எடுப்பதற்கு லென்ஸ்கள் வந்துவிட்டன..
  • contrast detect auto focus என்பதால் ஃபோகஸ் வேகம் சற்று குறைவு.. DSLR ல் இருப்பது போல் auto focus ற்கு என்று தனியாக சென்சார் கிடையாது..
  • பலர் விரும்பும் மிக முக்கிய அம்சமான optical view finder என்பது வாய்ப்பே இல்லை.. live view அல்லது electronic view finder தான் படம் எடுப்பதற்கு வழி..
  • DSLR அளவுக்கு க்ரிப் இருக்காது..
  • பேட்டரி DSLR உடன் ஒப்பிடும் போது mirror less கேமராவில் சீக்கிரம் தீர்ந்துவிடும். ஏனென்றால் LCD finder அல்லது EVF இந்த இரண்டும் , தவிர மற்ற விசயங்கள் அனைத்தும் electronics சமாச்சாரம் என்பதால் விரைவில் பேட்டரி தீர்ந்து விடும்..


குறைகள்: சிறிய கேமராக்களுடன் ஒப்பிடும் போது:

  • அளவில் சற்று பெரியது.. பாக்கெட்டில் வைக்க முடியாது..
  • ஒரே லென்ஸில் பெரிய zoom அளவுகள் கிடையாது..அதாவது 28-500mm , 28-800mmஎன்று இந்த மாதிரி.. ஆனால் 28-300mm (35mm format) வரையில் இப்போதைக்கு ஒரே லென்ஸில் கிடைக்கின்றன..இதுவே அதிகம்,போதும்..
  • ஒரு சில EVF வைக்கப்பட்ட கேமராக்கள் மட்டும் கிட்டதட்ட 75% DSLR மாதிரியே பெரிதாக இருக்கின்றன..
  • லென்ஸை அடிக்கடி மாற்றினால், சென்சாரில் DUST எளிதாக படியும் வாய்ப்பு அதிகம்.


தகவல்கள்:

  • தற்போதைக்கு third party lens கம்பெனியான SIGMA வும் இதற்கான லென்ஸ் தயாரிப்புகளை ஆரம்பித்து விட்டன என்பது ஒரு நல்ல செய்தியாகும்.. இதனால் விலை குறைவான லென்ஸ்களையும் வாங்கலாம்..
  • இன்றைய நிலவரப்படி NIKON மற்றும் CANON கம்பெனிகள் இரண்டும் இன்னும் நுழையவில்லை.. ஆனால் மிக விரைவில் எதிர்பார்க்கலாம்..
  • இப்போதைய நிலவரப்படி இதன் விலை சற்று அதிகமே..
  • சிறியதாக கேமரா வேண்டும் என்றால் மட்டும் இவ்வகை கேமராக்களை வாங்கவும்.. மற்றபடி அளவு உங்களுக்கு பிரச்சனை இல்லையென்றால் DSLR ஐயே வாங்கவும்.. விலையும் கிட்டதட்ட ஒன்று தான்..
  • அதே சமயம் வீடியோவும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவ்வகை கேமராக்களை வாங்கலாம்

இவ்வகை கேமராக்கள்,

  • இரண்டு வடிவங்களில் வருகின்றன ,
1.எந்த view finderம் இல்லாமல் (optical மற்றும் electronic) ஒரு வகையும்,

sony NEX3 ,
sony NEX5 ,
panasonic GF1 ,
panasonic GF2 ,
olympus E-PL1 ,
olympus E-PL2,
olympus E-P2 ,
samsung NX 100)


2. EVF வைத்து ஒரு வகையும்.. இது கிட்டதட்ட 75% DSLR மாதிரியே இருக்கும்.

samsung NX10 ,
samsung NX-11 ,
panasonic G1 , G2 , G10 ,
panasonic GH1 ,GH2 .


  • இரண்டு சென்சார்களில் வருகின்றன...
1. APS-C size சென்சார்( sony மற்றும் samsung)

2. four-third சென்சார்(panasonic மற்றும் olympus) இது APS-C sensorஐ விட சிறியதாகும். இதை தான் micro four third sensor என்று கூறுகின்றனர்..



அடுத்த பகுதியில் இன்னும் பிற INTERCHANGABLE LENS கேமராக்களை பற்றி பார்ப்போம்.


நன்றி
கருவாயன்

Sunday, February 13, 2011

இதற்கு முன்னர் பகுதியில் DSLR ஐ பற்றிய தகவல்களை நாம் பார்த்தோம்..

1. DSLR கேமராக்கள் ஏன் பெரிதாக் இருக்கின்றன .

2. DSLR சென்சாரின் பல வகைகள்..

3. DSLR நன்மைகள் , குறைகள்

அதன் அளவு பெரியது என்பதையும்,அதற்கான காரணங்களையும் பார்த்தோம்..
பல நன்மைகள் இருந்தாலும் பலர் இவ்வகை DSLR கேமராக்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டுவார்கள்..

ஒரு சிலருக்கு பட்ஜெட் பிரச்சனை இருக்காது, ஆனால் பெரிய சைஸ் கேமராக்கள் அவர்களுக்கு ஒத்து வராது..பிடிக்காது.

ஒரு சிலர் அதை பெரிய அளவை பார்த்ததுமே ஏதோ பெரிய விசயங்கள் இருக்கும், எனவே நமக்கு அது ஒத்து வராது என்று ஒதுங்கி விடுவார்கள்..

ஆனால் அவர்கள் விரும்புவது, சிறிய சைஸ் கேமராவில் நல்ல குவாலிட்டி படங்கள் எடுக்க வேண்டும்.
இதற்காக விலை எவ்வளவு வேண்டுமானாலும் தர தயாராக இருப்பார்கள்..

ஆனால் சின்ன சென்சார் என்பதால் சிறிய கேமராக்களை வாங்கினால் குவாலிட்டி கொஞ்சம் இருக்காதே... என்ன செய்வது??

DSLR குவாலிட்டியில் படமும் வேண்டும் , அதே சமயம் கேமராவும் சிறியதாக இருக்க வேண்டும்..

சரி இந்த மாதிரி வாடிக்கையாளர்களுக்கு என்ன தான் வழி ?

இவர்களுக்கு ஒரு அருமையான வழி தான் இந்த mirror less கேமரா..



சரி, அதென்ன mirror less கேமரா?


DSLR கேமராக்களை விட சிறியதாக, ஆனால் DSLR போன்றே picture quality மற்றும் செயல்படும் திறன் கொண்ட கேமரா தான் mirror less கேமராவாகும்..


நாம் DSLR ல் பகுதியில் பார்த்திருப்போம்,அதன் பெரிய அளவிற்கு மிக முக்கிய காரணம் optical viewfinder க்காக கேமராவிற்குள் அமைக்கப்படும் mirror box மற்றும் pentaprism தான்..

இந்த mirror box ஐயே இல்லாமல் செய்தால் !!

இதனால், தானாக ஒரு கனிசமான அளவு கேமரா bodyன் அளவு குறையும்.. இதனால் கேமரா பார்ப்பதற்கு ஒரு குட்டி DSLR போல் இருக்கும்..

இந்த படங்களை பார்த்தால் வித்தியாசம் தெரியும்..
(படத்தை பெரிதாக பார்க்கவும்)


இந்த மாதிரி கேமராக்கள் mirror box இல்லாமல் வடிவமைக்கப்பட்டதால் இது mirror less கேமரா என்று கூறப்படுகின்றது..
இந்த mirror box ஐ தூக்கிவிட்டால்...

நாம் முக்கியமாக இரண்டு விசயங்களை தியாகம் செய்ய வேண்டியது தான்..

1.OPTICAL VIEW FINDER:

Mirror Less கேமராவில் , mirror box இல்லாததால் நம்மால் otical view finder ஐ பயன்படுத்த முடியாது..

எனவே optical view finderக்கு பதிலாக சிறிய கேமராக்களில்
live view ஐ பயன்படுத்துவோமே அது மாதிரி பயன்படுத்தி தான் படமெடுக்க முடியும்.

live view ஐ மட்டும் பயன்படுத்தி படமெடுப்பதற்கு என்றால் mirror box என்பது தேவையில்லை..


2.AUTO FOCUS வேகம்:இவ்வகை கேமராக்களில் autofocus ன் வேகம் DSLR கேமராக்களை விட சற்று குறைவு தான்..
ஏனென்றால் DSLR ஐ பொறுத்த வரையில் லென்ஸ் வழியாக வரும் ஒளியினை ஒரு பகுதி அப்படியே நேரிடையாக auto focus செய்வதற்கு பயன்படுத்தப்படும்..

Auto Focus ற்க்கு என்று தனியாக சின்னதாக ஒரு சென்சார் இருக்கும்
இதை phase detection auto focus முறை என்று கூறுவர்..

ஆனால் Mirror Less கேமராவிலும் , மற்ற சிறிய கேமராக்களிலும் mirror box இல்லாததால் phase detection auto focus முறையை பயன்படுத்த முடியாது..

அதற்கு பதிலாக contrast detect auto focus முறையை தான் பயன்படுத்த முடியும்..

இது எப்படி என்றால் , லென்ஸ் வழியாக வரும் ஒளியினை சென்சாரில் பதிவு ஆனபிறகே AF செய்ய முடியும்.. இதில் Auto Focusற்க்கு என்று தனியாக சென்சார் எதுவும் கிடையாது..

இதனால் Auto Focus சற்று காலதாமதம் பிடிக்கும்..

ஆனால் சிறிய கேமராக்களை விட, mirror less கேமராவில் சற்று வேகமாக Auto Focus இருக்கும்..
mirror less கேமராவில்.. சென்சார் பெரிது என்பதாலும் , லென்ஸும் பெரிது என்பதாலும், லென்ஸிற்கும் கேமரா பாடிக்கும் தொடர்புகள் அதிகம் என்பதாலும், இதன் AF வேகம் கண்டிப்பாக சிறிய கேமராக்களை விட வேகமாக தான் இருக்கும்..

தற்போதைய technology ன் படி கிட்டதட்ட 70-80 % வரை DSLR கேமராக்களின் AF வேகத்திற்கு சமமாக படம் எடுக்கக்கூடிய contrast detect AF முறைகள் வந்து விட்டன..


mirror less கேமராவின் அமைப்பு:

  • Mirror Less கேமராவில் mirror box இல்லாமல் போவதால் சென்சாருக்கும் , லென்ஸ் mountற்கும் உள்ள தொடர்பு தூரம்(flange back distance) பாதியாக குறைந்து விடுகின்றது..



இதனால் நாம் live view பயன்படுத்தி படம் எடுக்கும் போது DSLR ன் LIVE VIEWஐ விட வேகமாக படம் எடுக்கலாம்,

  • கேமராவிற்கு தகுந்த குறிப்பிட்ட adoptor ஐ பயன்படுத்தி எந்த brand லென்ஸையும் பயன்படுத்த வழி இருக்கின்றது..



ஆனால் இன்றைய technologyல் இந்த மாதிரி பயன்படுத்தும் போது manual focus தான் வழி.. manual focus பிரச்சனை இல்லையென்றால் எந்த ப்ராண்ட் லென்ஸையும் பயன்படுத்தி படம் எடுக்கலாம்.

  • DSLR கேமராக்களை விட ,லென்ஸிற்கும் கேமரா bodyக்கும் உள்ள தொடர்பு புள்ளிகள் அதிகம்.. உதாரணம் இந்த படத்தை பார்க்கவும்..


  • இதனால், live view பயன்படுத்தி படமெடுக்கும் போது நல்ல வேகமாகவும் , smooth ஆகவும் இருக்கும்

  • சிறிய கேமராக்களின் முக்கிய குறையான shutter lag என்பது பல மடங்கு குறைந்து விடும்..

  • contrast detect AF கூட வேகமாக ஃபோகஸ் செய்யும்

  • data processing என்பதும் வேகமாக நடக்கும், இதனால் வீடியோ அருமையாக பெரிய லென்ஸ்களில் அமையும்..

  • அதே சமயம் லென்ஸையும் சிறியதாக வடிவமைக்கலாம் என்பதால் லென்ஸ் diameter அளவும் குறைந்து விடுகின்றது..



பயன் படுத்தப்படும் சென்சார்கள்:
தற்போதைக்கு சந்தையில் olympus , panasonic போன்ற கம்பெனிகள் olympus DSLR ல் பயன்படுத்தப்படும் four third சென்சாரை பயன்படுத்துகின்றன..

இதனால் இவ்வகை கேமராக்கள் MICRO FOUR THIRD கேமராக்கள் என்று கூறுகின்றனர்..



அடுத்த கட்டமாக தற்போது sony மற்றும் samsung கம்பெனிகள் APS-C சைஸ் சென்சாரை பயன்படுத்துகின்றன..


இதன் சென்சார் four third sensorஐ விட சற்று பெரியதாகும்..
இதனால் லென்ஸ் அளவு மற்றும் lens- body mount diameter இரண்டு மட்டும் சற்று பெரிதாக தான் வரும்..



MIRROR LESS கேமரா வகைகள்:

ஒன்று, நாம் live view மட்டுமே பயன்படுத்தி படமெடுப்பதற்கு கேமராவின் பின்னால் இருக்கும் LCD finder ஒன்று மட்டும் தான் வழி..


இதில் view finder என்பது கிடையாது.. எனவே படத்தை shoulder உதவியுடன் arm levelல் தான் கம்போஸ் செய்வதற்கு வழி..

இதனால் தான் கனிசமான அளவில் கேமராவின் BODY அளவு குறைகின்றது..

மற்றொன்று , இந்த வகை கேமராக்களில் optical view finder என்பது சாத்தியமில்லை எனவே , eye level கம்போஸிசன் செய்வதற்கு வழியாக optical view finderற்கு பதிலாக electronic view finder ஐ பயன்படுத்தி படமெடுக்கலாம்..



EVF என்பது ஒரு குட்டி LCD monitor தான்.. EVF ஐ வடிவமைப்பதற்கு mirror box தேவையில்லை..

ஆனால் EVF இருந்தால் சைஸ் கொஞ்சம் பெரியதாகும்... இந்த மாதிரி..

இந்த படத்தில் இருக்கும் இரண்டு கேமராக்களுமே MIRROR LESS கேமரா தான்..

அதே சமயம், சிறிய mirror less கேமராவிலும் EVF பயன்படுத்துவதற்கு வேறு ஒரு வழி உள்ளது..

கேமராவில் hot shoe கொடுத்திருப்பார்கள்..
இதில் external flash ம் பயன்படுத்தலாம் , அதே சமயம் external EVF ஐயும் அதில் பயன்படுத்தலாம்.. இந்த மாதிரி..
Mirror Less கேமராக்களின் நன்மைகள் , குறைகள் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்...

நன்றி
கருவாயன்

Thursday, February 10, 2011

அன்பு நண்பர்களே...

சென்ற பகுதிகளில்,

1. DSLR கேமராக்கள் ஏன் பெரிதாக் இருக்கின்றன ..

2. DSLR சென்சாரின் பல வகைகள்..

ஆகியவற்றை பற்றி பார்த்தோம்..

இப்பகுதியில் DSLR கேமராக்களின் நன்மைகள் , குறைகளை பற்றி பார்ப்போம்..


DSLR ன் நன்மைகள்:



1. DSLR ல் பெரிய சென்சார் என்பதால், அதிக விலை உயர்ந்த,பல features கொண்ட சிறிய கேமராக்களின் image quality ஐ விட ,விலை குறைந்த DSLR ல் image quality கண்டிப்பாக நன்றாக இருக்கும்..(ஒழுங்காக எடுத்தால்).

2. லென்ஸ்களை நம் விருப்பம் போல் தெர்ந்தெடுத்துக்கொள்ளலாம்,மாற்றிக்கொள்ளலாம்.
உதாரணமாக wide angle , macro , telephoto,etc.. போன்றவைகளை தனிதனியாகவே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
பாதிப்பு,டேமேஜ் வந்தாலும் லென்ஸை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்.

3.optical viewfinder இருப்பதால் நாம் கண்ணாடியில் பார்ப்பது போன்று subjectஐ தெளிவாக பார்க்கலாம்..

இதனால் படத்தை எளிதாக கம்போஸ் செய்யலாம்..

சிறிய கேமராக்களில் view finder இல்லாததால் , நமது shoulder துனையுடன் arm levelல் படங்களை எடுக்கும் போது கைகள் ஆடும் வாய்ப்பு அதிகம். (ARM LEVEL COMPOSING)



ஆனால் DSLR ல் கண்களை(eye level) ஒட்டி படம் எடுக்கும் போது கேமராவை க்ரிப்பாக பிடிக்க வசதியாக இருக்கும். இதனால் படங்களை ஆடாமல் எடுக்கலாம்.


(EYE LEVEL COMPOSING)


4.இன்றைக்கு basic DSLR கேமராக்கள் கூட 10 மெகா பிக்ஸல்களுக்கு மேல் வரத்தொடங்கி விட்டன.. அதே சமயம் 18,24 MP என்று அதிக மெகா பிக்ஸல் கேமராக்களும் கிடைக்கின்றன..
சிறிய கேமராக்களில் அதிக பிக்ஸல்கள் அமைப்பது சிரமம், அப்படியே இருந்தாலும் பெரிய நன்மை கிடையாது..

5.சிறிய கேமராக்களில் live view பயன்படுத்தி படமெடுப்பதால் shutter lag (தாமதம்) அதிகம்..இது DSLR ல் சுத்தமாக இல்லை. அதே சமயம் switch ஐ on பன்னினதும் உடனே படம் எடுக்கலாம்.. response time அதிகம்.

6.DSLR ல் கண்ட்ரோல்ஸ் அதிகம்.. தனிதனியாக பட்டன்கள், manual controls .. போன்ற பயன்பாடுகள் அதிகம்

7.அதி வேக லென்ஸ்களை பயன்படுத்தலாம்.. இதனால் flash இல்லாமல் இருட்டிலும் படம் எடுப்பது சாத்தியமாகின்றது..

8.flash பவர் என்பது அதிகம்.. பல சிறிய கேமராக்களில் external flash பயன்படுத்த முடியாது. அதே சமயம் சிறிய கேமராக்களின் internal ஃப்ளாஷ் power பல இடங்களில் பத்தாது.. இதனால் studio வைப்பவர்களுக்கு DSLR தான் வழி..

9.focusing speed என்பது பல மடங்கு அதிகம்..சிறிய கேமராக்கள் வெளிச்சம் குறைவான இடங்களில் சில சமயம் focus ஆகாது.. ஆனால் DSLR ல் இருட்டிலும் focus செய்வதற்கு எளிதாக focus light வசதி உண்டு.

10.சிறிய கேமராக்கள் தான் பயன்படுத்துவது எளிது என்று பலர் நினைக்கின்றனர்..ஆனால் practicalஆக DSLR தான் எளிது..

11.DSLR ல் ISO 3200 வரை எளிதாக பயன்படுத்தலாம்..படமும் தெளிவாக இருக்கும்,noiseம் குறைவாக தான் இருக்கும்.. ஆனால் சிறிய கேமராக்களில் ISO 200 க்கும் மேல் பயன்படுத்தும் போது கண்டிப்பாக noise இல்லாமல் படம் எடுப்பது வாய்ப்பு குறைவு.

12.இன்றைக்கு படம் எடுப்பது எவ்வளவு முக்கியமோ,அவ்வளவு photo editing என்பதும் முக்கியமாகி விட்டது.. DSLR ல் படம் எடுத்து பின் photo editing செய்தால் பாதிப்பு என்பது மிக மிக குறைவே..இதுவே சிறிய கேமராக்களில் சிறிது crop செய்தாலே smudging ,வந்து விடும்..

13. focusing area(focusing point) எந்த இடத்தில் வேண்டுமானாலும் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.. இதனால் நமக்கு முக்கியமான இடத்தை மட்டும் தெளிவாக ஃபோகஸ் செய்யலாம்..

இன்றைக்கு சாதாரணமாக 5 focusing point முதல் 51 focusing point வரை (இதற்கு மேலும் உண்டு) மாற்றிக்கொள்ளும் வசதி DSLR கேமராக்களில் உண்டு..



(5 point focusing area)





(51 point focusing area)




DSLRன் குறைகள்:

1.தனிதனியாக லென்ஸ்கள் வேண்டும் என்பதாலும், நிறைய controls இருப்பதாலும் தானாக பட்ஜெட் ஏறிவிடுகின்றது..

2.அளவில் பெரியது..

3.எல்லா இடங்களுக்கும் கொண்டுபோக முடியாது..இதுக்கென தனியாக பேக் வேண்டும். பாக்கெட்டில் வைத்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியாது..இதனால் சில கேண்டிட் ஷாட்களை நாம் தவற நேரிடலாம்..

4.வெயிட் அதிகம்.. எனவே ஒரு சிலர் குறிப்பாக பெண்கள் இதை பயன்படுத்த சிரமப்படுவார்கள்.,விரும்ப மாட்டார்கள்

5.பெரிய சென்சார் என்பதால் depth of field என்பது சிறிய கேமராக்களை விட குறைவு..

6.சிறிய கேமராக்களில் இருப்பது போல் ஒரே லென்ஸில் நல்ல wide angle முதல் telephoto zoom வரை அமைக்க முடியாது..சிறிய கேமராக்களில் 24mm முதல் 700mm வரையில்(35mm formatல்) இப்போழுது லென்ஸ்கள் உடைய கேமராக்கள் கிடைக்கின்றன.. ஆனால் DSLRல் 28mm முதல் 400mm வரை தான் இப்போதைய நிலவரப்படி உண்டு..


இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும்...பட்ஜெட் , அளவில் பெரியது இவ்விரண்டை தவிர , அனைத்து விசயங்களும் , சிறிய கேமராக்களை விட பல வகைகளில் DSLR சிறந்ததே...

சரி, சிறிய சைஸ் கேமராக்களில் இதே DSLR image quality யுடன் படங்கள் எடுக்க வாய்ப்பே இல்லையா ?


என்று கேட்பவர்களுக்கு.. பதில்.. உண்டு..


அட...அது என்ன கேமரா? என்பதை அடுத்த பகுதியில் விரிவாக பார்ப்போம்..


நன்றி
கருவாயன்

Tuesday, February 1, 2011

1..சென்ற பகுதியில் DSLR கேமராவின் அளவு பெரிதாக இருப்பதற்க்கான முதல் காரணத்தை பார்த்தோம்..

பிற காரணங்களை இப்பகுதியில் பார்ப்போம்...

2.. DSLR சென்சார்கள்..

சென்சார்களை பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்து விட்டோம்..

மேலும் சென்சாரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், DSLR லேயே பல வகை அளவுகளில் சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன..

இதில் சென்சார் அளவுகள் குறைய குறைய கேமரா bodyயின் அளவுகளும் ஒரு குறிப்பிட்ட அளவு சிறியதாகும்...

ஆனால் எப்படியும் viewfinder இருப்பதால் சிறிய கேமராக்கள் அளவுகளுக்கு குறையாது..

DSLR ல் பயன்படுத்தப்படும் சென்சார் வகைகள்..

இதில் வரிசைப்படி பெரிய சைஸ் ஆகும்..

1.medium format

2.full frame


3.aps-c size


4.four third sensor


இவற்றில் medium format சென்சார் பயன்படுத்தப்படும் கேமரா விலை அதிகமாக இருக்கும்..

இந்த மாதிரி பெரிய சென்சார் உள்ள கேமராக்கள் விளம்பர படம் எடுப்பதற்கு மிகவும் பயன்படுத்தப்படுகின்றன..

ஏனென்றால் சென்சார் பெரியதாக இருக்கும் போது தான் pixels அதிகமாக பயன்படுத்தமுடியும்..

பிக்ஸல்கள் அதிகமாக இருந்தால் தான் பெரிய்ய்ய்ய்ய அளவிலான விளம்பர பேனர்கள் வைக்கமுடியும் என்பதால் இவ்வகை கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன..

MAMIYA , PHASE ONE , HASSEL BLAD போன்ற கம்பெனிகள் இவ்வகை சென்சார்களை பயன்படுத்துகின்றன..

full frame சென்சார் கேமராக்கள்...இது நாம் முன்னர் பயன்படுத்திய ஃப்லிம் நெகட்டிவின் அளவு ஆகும்..

NIKON D700 , D3 , CANON 5D , 1D , etc.. போன்ற கேமராக்கள் full frame சென்சார்களை பயன்படுத்துகின்றன..


aps-c size என்பது தான் இப்பொழுது பரவலாக nikon , canon , sony போன்ற கேமராக்களில் பயன்படுத்தப்படும் அளவுகளாகும்.

NIKON D3100 , D5000 , D300 , D90 , D7000 ,
CANON 550 D , 60 D , 7 D
SONY ALPHA A250 , A100
PENTAX k 5

போன்ற கேமராக்கள் இந்த அளவுகளை பயன்படுத்துகின்றனர்..

மேலே சொன்ன மூன்று சென்சார்களின் அளவுகள் சிறியது, பெரியதாக வித்தியாசமாக இருந்தாலும், அமைப்பு என்பது 3:2 எனற அளவில் ஒரே மாதிரி தான் இருக்கும்..

படத்தை பார்த்தால் புரியும்..



ஆனால் ,

four third sensor என்பது olympus மற்றும் panasonic போன்ற DSLR கேமராக்களில் பயன்படுத்தப்படும் வேறு மாதிரி அமைப்பு கொண்ட சென்சார் ஆகும்..

இந்த வகை சென்சார்கள் எதற்கு என்றால்??

DSLR கேமராக்களின் அளவுகள் என்பது பெரியதாக இருக்கின்றது.. அதை குறைக்க என்ன வழி ?

DSLR கேமராக்களின் அளவுகளை குறைக்க வேண்டுமென்றால் , சென்சாரின் அளவை குறைக்க வேண்டும்..
இதனால் லென்ஸையும் சற்று சிறியதாக வடிவமைக்கலாம்..
இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு கேமராவை சிறியதாக்கலாம்..

ஆனால் சென்சார் சிறிதானால் குவாலிட்டி குறையுமே...

சென்சாரையும் சிறிதாக்கவேண்டும்,அதே சமயம் குவாலிட்டியும் குறைய கூடாது ..

அதற்கு 4:3 சென்சார்அமைப்பு ரொம்பவும் உதவியாக இருக்கும் என்பதால் அதை உருவாக்கினர்..

அது என்னவென்றால்,

four third sensor என்பது 4:3 என்ற அமைப்பில் சென்சார் இருக்கும்..
வீடியோ கேமராக்கள் மற்றும் சிறிய கேமராக்களிலும் இந்த மாதிரி தான் அமைப்பு இருக்கும்..

சரி இதில் என்ன நன்மை?

இது எதற்கு என்றால்,பொதுவாக லென்ஸ் வழியாக வரும் ஒளி என்பது வட்டமாக தான் வரும்..அந்த வட்டத்தை கட்டமாக தான் சென்சாரில் பதிவு செய்ய முடியும்...

அப்படி கட்டமாக பதிவு செய்யும் போது லென்ஸ் வழியாக வருகின்ற ஒளியில் ஒரு குறிப்பிட்ட அளவு கட் ஆகி தான் பதிவு செய்ய முடியும்.. (முதல் படத்தை பெரிதாக பார்த்தால் புரியும்)

இதில் இரண்டு வகைகளில் கட்டம் கட்டுகின்றனர்.. ஒன்று 3:2 மற்றொன்று 4:3..

இதில் 3:2 ratio வில் பதிவு செய்வதை விட 4:3 ratio வில் பதிவு செய்தால் அதிக அளவில் light fall off இல்லாமல் படத்தை பிடித்துக்கொள்ளலாம்..

சென்சாரும் சிறியதாக இருந்தால் போதும் என்பதால் 4:3 முறையை உருவாக்கினர்..

உதாரணமாக நாம் பார்க்கும் TV மற்றும் computer ன் அமைப்பும் கிட்டதட்ட அதே மாதிரி அளவு என்பதால் நாம் computerல் 4:3 போட்டோவை பார்க்கும் போது screen முழுவதும் பார்க்கலாம்..

உதாரணமாக இந்த படங்களை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்..


4:3 சென்சார்



APS - C 3:2 சென்சார்




இவ்வகை சென்சார்களால் மற்ற DSLR கேமராக்களை விட கொஞ்சம் சிறிதாக வடிவமைக்க முடியும்..

ஆனால் படம் பிடிக்கும் 4:3 அமைப்பு பெரியதாக இருந்தாலும் , சென்சாரின் அளவு என்னவோ full frame சென்சாரை விட பாதி சிறியது தான்..

இதனால் , full frame மற்றும் APS-C சென்சார் கேமராக்களை விட சற்று noise அதிகம் வரும், அதே சமயம் நாம் ப்ரிண்ட் என்பது 3:2 ratio வில் தான் வரும் என்பதால் பிரிண்ட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதி கட் ஆகி விடும்..

3.லென்ஸ்கள்

ஏற்கனவே சொன்ன மாதிரி தனித்தனியாக பிரித்து zoom லென்ஸ் தயாரிக்கும் போதும், வேகமான aperture லென்ஸ்களை தயாரிக்கும் போதும், இதன் அளவுகள் பெரியதாகிக்கொண்டே இருக்கும்..

இதுவும் DSLR கேமராக்கள் பெரியதாவதற்கு ஒரு காரணம்..

4. DSLR கேமராவின் அமைப்பு (ergonomics)

எளிதாக பயன்படுத்துவதற்காக அததெற்கென தனிதனி பட்டன்கள், mode dial,கைகள் நன்றாக க்ரிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆழமாகவும்,internal flash போன்றவைகள் இருப்பதாலும் கேமராக்கள் தானாக பெரியதாகிவிடுகின்றது..

இவையெல்லாம் தான் ஒரு DSLR என்பது பெரியதாக இருப்பதற்கு முக்கிய காரணங்களாகும்..

அடுத்த பகுதியில் DSLR கேமராக்களின் நன்மைகள் , குறைகளை பற்றி பார்ப்போம்...

நன்றி
கருவாயன்

Friday, January 28, 2011

அன்பு நண்பர்களே,

முதல் சுற்றில் முன்னேறியவர்களிலிருந்து முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் யார் என்று பார்ப்பதற்கு முன்,

இறுதி சுற்றில் முதல் ரவுண்டில் வெளியேறிய படங்களை பற்றி பார்ப்போம்...(வெளியேறியது எதுவும் வரிசைப்படி கிடையாது)

முத்துலெட்சுமி அவர்களின் படம்( யாரு சொர்ணமால்யா மாதிரி தெரியுது??)



நல்ல முகபாவத்தை படம் பிடித்ததற்காக முதல் சுற்றில் முன்னேறியது.. ஆனால் க்ராப் செய்த முறை நன்றாக இல்லை..அதே சமயம் கலர்ஸ் கொஞ்சம் saturations அதிகம்..

இந்த மாதிரி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்..

anton அவர்களின் படம் நல்ல ஒளியைமப்பிற்காக முன்னேறியது..



ஆனால் முகம் டைட் க்ராப், முகத்தில் உணர்ச்சிகளும் பெரிதாக இல்லை,அதே சமயம் முகத்தை விட ஜன்னலே அதிகமாக தெரிவது ஒரு மைனஸ்..

இந்த படத்தை இன்னும் கொஞ்சம் க்ராப் செய்து இப்படி இருந்தால் நன்றாக் இருக்கும் என்பது எனது கருத்து..





டில்லி பாபு
அவர்களின் படம்



குழந்தைகள் பாட்டு பாடிக்கொண்டே கேமராவை பார்ப்பது ஒருவித அழகாக இருந்ததால் முன்னேறியது..

ஆனால் பின்னால் ஒரு இருப்பவர்களால் கொஞ்சம் distraction மற்றும் ,

கம்போஸிசன் இன்னும் நன்றாக, ஆரஞ்ச் கலர் உடை அனிந்த குழந்தைகள் மட்டும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..




மணி அவர்களின் படம்,



சிறுவனின் படம் போஸ் ஆக இருந்தாலும், கரும்பை கடித்துக்கொண்டே இயல்பாக ஒரு வெட்கம் கலந்த புன்னகை அழகாக இருந்ததால் முன்னேறியது..

டோனும் நன்றாக இருக்கின்றது...ஆனால் படம் கம்போஸிசன் கொஞ்சம் சிறப்பாக இல்லை மற்றும் பின்னால் தெரிவது கரும்பு இலையாக இருந்திருந்தால் கொஞ்சம் நன்றாக வந்திருக்கும்..

கொஞ்சம் க்ராப் செய்து கீழே உள்ள படம் மாதிரி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..




துரை
அவர்களின் படம்,



அந்த குழந்தையின் உணர்ச்சி அருமையாக இருந்ததால் முன்னேறியது..

ஆனால் ஃபளாஷ் அதிகம் , பின்னால் தெரியும் T.V. இவையெல்லாம் படத்திற்கு சிறு குறையே..

இந்த மாதிரி இருந்தால் படம் இன்னும் நன்றாக் இருக்கும்..






ASJ ALOYS
அவர்களின் படத்தில் ,


மழலை குழந்தையின் சலவாய் அழகு , மற்றும் distractions இல்லாத BW ல் படம் நன்றாக இருக்கின்றது..

ஆனால் ரொம்ப டைட்டாக க்ராப் செய்தது ஒரு குறையே..இன்னும் கொஞ்சமாவது இடம் வேண்டும்..அல்லது இன்னும் டைட்டாக க்ராப் கீழே உள்ள படம் மாதிரி இருக்க வேண்டும்...




அரவிந்த்
அவர்களின் படமும் இதே மாதிரி தான்..



மூன்று பெண்களும் எதையே பார்த்து இயற்கையாக சிரிப்பது நன்றாக இருக்கின்றது..

இருந்தாலும் படம் ரொம்ப டைட் க்ராப்..

அதுவும் முகத்தில் கையை வைத்து இருக்கும் பெண்ணின் கையை கண்டிப்பாக க்ராப் செய்திருக்கக்கூடாது என்பது எனது கருத்து..

அதே சமயம் அவர்கள் எதை பார்த்து சிரிக்கின்றார்கள் என்பதையும் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்.

அல்லது அந்த படத்தை இன்னும் கொஞ்சம் டைட்டாக கம்போஸ் செய்து பின்,





அடுத்து,

இரண்டாவது ரவுண்டில் வெளியேறிய படங்களில்,


சித்தா ட்ரீம்ஸ் அவர்களின் படம்,




இந்த மாதிரி ஓணானை படம் பிடிப்பது என்பது எளிதான விசயம் இல்லை.. அதுவும் நல்ல தெளிவாக படம் எடுத்ததற்காக இரண்டாவது ரவுண்டில் முன்னேறினாலும்..

கம்போஸிசனில் கொஞ்சம் குறையே.. கொஞ்சம் அதிகமான blank space இருக்கின்றது..

அதே சமயம் தலைப்பிற்கு இப்படம் பொருந்தினாலும் மனித முகங்களுக்கே சற்று முன்னுரிமை கொடுக்க தோன்றுகின்றது..


இந்த மாதிரி படம் கம்போஸிசன் இருக்க வேண்டும்..




நித்தி க்ளிக்ஸ் அவர்களின் படத்தில் ,




சிறுவனின் அழகான உடைந்த பல் சிரிப்பு வசீகரிக்கின்றது.. distractions படத்தில் பெரிதாக இல்லை என்பதால் இப்படம் முன்னேறியது..

இருந்தாலும் படம் கொஞ்சம் டைட் மற்றும் சிம்பிள் போஸ் என்பதாலும் இந்த ரவுண்டில் வெளியேறுகின்றது..


இன்னும் கொஞ்சம் contrast இருக்க வேண்டும்..



சத்தியா அவர்களின் படமும் இதே மாதிரி தான்...




பையன் நல்லா குண்டு குண்டுன்னு அழகா இருக்கின்றான்.. சிரிப்பும் அழகு.. புடிச்சு கிள்ளி வெக்கனும் போல் இருக்கு..

இருந்தாலும் இப்படம் கொஞ்சம் சிம்பிள் டைப் போஸ் என்பதால் வெளியேறுகின்றது..

கொஞ்சம் contrast இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..




அமைதி சாரல் எடுத்துள்ள படத்தில்




குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பு அழகு மற்றும் படம் நல்ல தெளிவாக இருந்ததாலும் முன்னேறியது.. ஃப்ளாஷ் ஒளியும் சரியாக உள்ளது...

இருந்தாலும் பின்னால் தெரியும் ஜன்னல் மற்றும் தலையனை கொஞ்சம் distractons..

எனவே இப்படம் இந்த ரவுண்டில் வெளியேறுகின்றது..

இந்த படத்தை கீழே உள்ள மாதிரி க்ராப் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்..






நந்தனா அவர்களின் படத்தில்




இருக்கும் சிறுவனின் துறுதுறு பார்வை மற்றும் பேக்கிரவுண்ட் டோன் இரண்டும் attract செய்தாலும் ,
படம் கொஞ்சம் ஒவர் exposure ,போஸ் கொடுத்திருப்பது, மற்றும் கொஞ்சம் குறையான கம்போஸிசன் இவற்றால் இப்படம் வெளியேறுகின்றது..

distractions ஐ க்ராப் செய்து இந்த மாதிரி படத்தை அமைக்கலாம்..






ப்ரேம் அவர்களின் படத்தில்,




அருமையான டோன், அழகான முகம் , நல்ல தெளிவான படம் இவற்றிற்காக முன்னேறியது..

இருந்தும் சிறு குறைகளாக க்ராப் மற்றும் கம்போஸிசன் , போஸ் ஆகியவற்றால் இப்படம் வெளியேறுகின்றது..

இருப்பினும் இப்படம் அழகான படமே..

கொஞ்சம் இந்த மாதிரி க்ராப் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து..






கோபி பிள்ளை அவர்கள் படம்,



மிக அருமையான portrait..black and white ல் படம் மிக அழகு ..
அருமையான ஷார்ப்.. நல்ல ஒரு ஸ்டுடியோ ஷாட்..

இருப்பினும் இந்த மாதிரி கம்போஸிசன் இருந்தால் படம் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து..





இந்த ரவுண்டில் வெளியேறிய படங்கள் அனைத்தும் முகங்கள் தலைப்பிற்கு ஒத்து வந்தாலும், நன்றாக இருந்தாலும்,

இவை அனைத்தும்(சித்தா ட்ரீம்ஸ் தவிர) போஸ் கொடுக்க வைத்து எடுக்கப்பட்டவை மற்றும் கொஞ்சம் ஈஸி டைப் படங்கள்..

இவை அனைத்தும் முகங்கள் தலைப்பை விட portrait என்ற தலைப்பிற்கு நன்றாக பொருந்தும் என்பது எனது கருத்து.

அதாவது portrait படம் இருந்தாலும் முகங்கள் இயற்கையாக ,இயல்பாக இருப்பதை எடுத்த்ருந்தால் இத்தலைப்பிற்கு சிறப்பாக இருக்கும்...


இறுதி சுற்றில்,



BM கண்ணன் அவர்களின் படத்தில்,




சிறுவனின் உணர்ச்சி வெளிப்பாடு இத்தலைப்பிற்கு மிக அழகு.. கண்கள் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது..டோனும் அருமை..

இருப்பினும் கம்போஸிசன் இந்த மாதிரி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..





மூன்றாம் இடத்திற்கு போட்டி போடுவது...

அஜின் ஹரி

ரேவதி


ஜெயஸ்ரீ



அஜின் ஹரி அவர்களின் படம்,



கண்களை மூடிக்கொண்டு சிரிக்கும் மழலை மிக அழகு.. நல்ல moment...

இடது தலை ஓரம் வந்திருக்கும் நிழல் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கத்தோன்றுகின்றது..அதே சமயம் படம் கொஞ்சம் brightness மற்றும் sharpness அதிகமாக தெரிகின்றது...இருந்தாலும் இப்படம் அழகு...

படத்தை கொஞ்சம் க்ராப் செய்து,contrast கொஞ்சம் அதிகப்படுத்தி இந்த மாதிரி படம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..





ரேவதி அவர்களின் படத்தில்,




பால் வடியும் முகம் அப்படிங்கறது இது தான் என்கிற மாதிரி இப்படம் அழகாக உள்ளது..அழகான,இயல்பான புன்னகை இவை அனைத்தும் அருமை..

இருப்பினும் படம் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருக்க வேண்டும்.. அதே சமயம் க்ராப் அதிகமாகி விட்டது சிறு குறையே..

அல்லது இன்னும் கொஞ்சம் கீழே உள்ள படம் மாதிரி டைட்டாக க்ராப் செய்யலாம்..





ஜெய ஸ்ரீ அவர்களின் படத்தில்,



செம சிரிப்பு படம்.. கண்ணை மூடிக்கொண்டு எவ்வளவு ஆனந்தமாக சிரிக்கின்றது.. முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது..பேக்க்ரவுண்டும் உறுத்தல் இல்லை..

கொஞ்சம் இந்த மாதிரி கம்போஸிசன் இருந்திருக்கலாம்..





இம் மூன்றில் அனைத்துமே அருமை தான்..

இருப்பினும் எதோ ஒன்றை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், இதில் சற்று சிறப்பாக இருப்பது ஜெயஸ்ரீ அவர்களின் படம்..

எனவே, மூன்றாம் இடம் பிடிப்பது ஜெயஸ்ரீ...




அடுத்து இரண்டாம் இடத்திற்கு போட்டி போடுவது

MQN

ஆயில்யன்



MQN அவர்களின் படம் எப்பொழுதும் போல் தெளிவாக படம் எடுத்து எளிதாக இறுதி சுற்று வரை வந்து விட்டார்..




கறுப்பு வெள்ளையில் படம் அழகு சேர்க்கின்றது..ஜன்னல் ஒளியும் அருமை,அந்த குட்டி பையன் கன்னம் அக்காவின் தோளில் சாய்ந்து இருப்பதும் அழகாக உள்ளது..

இருப்பினும் இன்னும் கொஞ்சம் க் டைட்டாக கீழே உள்ள படம் மாதிரி கம்போஸிசன் இருந்தால் இத்தலைப்பிற்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.. நமது கண்களும் குழந்தைகளின் முகத்திற்கே பார்க்க சொல்லும்...

அதே சமயம் முகத்தில் கொஞ்சம் கூடுதல் உணர்ச்சி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்..







ஆயில்யன் அவர்கள் படத்தில்,




இந்த சிறுமி அப்படியே ஒரு சிலை மாதிரி இருக்கின்றார்.. அருமை..

நமது பார்வையை நேராக கண்களுக்கே அழைத்து செல்வது இப்படத்தின் பெரிய ப்ளஸ்..

இதே மாதிரி ஒரு பொம்மை இருந்தால் கண்டிப்பாக நமது வீட்டு வரவேற்பறையில் வைக்கலாம் போல் உள்ளது...

கொஞ்சம் ஷார்ப்னெஸ் ,கொஞ்சம் இடம் விட்டு இருந்தால் இப்படம் இன்னும் நன்றாக இருக்கும்..

இருப்பினும் இது ஒரு பெரிய குறை இல்லை..

கொஞ்சம் contrast வைத்து, வண்ணங்களை கொஞ்சம் மாறுதல் செய்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்



இவ்விரண்டில் ஆயில்யன் அவர்களின் படம் கொஞ்சம் போஸ் கொடுப்பது போல் இருப்பது சிறு குறையாக இருந்தாலும்,

அதையும் அழகாக படம் எடுத்ததற்காக ,

இரண்டாம் இடம் பிடிப்பது ஆயில்யன்..

இறுதியாக நாகப்பன் அவர்களின் படத்தில்,





முகங்கள் தலைப்பிற்கு மிக சரியாக இந்த படம் பொருந்துகின்றது...

எத்தனை முகங்கள்..,ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான முக உணர்ச்சிகள்..

அப்படியே whole saleல ஜப்பான் முகங்களை அள்ளிக்கொண்டு வந்திருக்கின்றார் எதுவும் உறுத்தாமல்..

கம்போஸிசனும் நன்றாக உள்ளது.. முன்னாடி இருந்து பின்னாடி சென்றாலும் முகங்கள்...

அருமை...

எனவே,

முதலிடம் பிடிப்பது நாகப்பன்...



நாகப்பன் அவர்களுக்கு PIT ன் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

மற்றும் முதல் மூன்றில் வந்தவர்களுக்கும் ,

இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்...


விரைவில் அடுத்த மாதத்திற்கான தலைப்புடன் உங்களை சந்திக்கின்றோம்..

நன்றி
கருவாயன்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff